சிவபுராணம்
என்று பெயர் கொண்ட இப்பதிகம் சீவபுராணமல்லவா பேசுகின்றது? ஏன் சிவபுராணம்
எனப் பெயர் பெற்றது? மாணிக்கவாசகப் பெருமான் பரம்பொருளாகிய சிவபெருமானைப்
பலவாறெல்லாம் போற்றி அவர் பூவார் திருவடிகளுக்குத் தம்முடைய உளமார்ந்த
வணக்கங்களைக் கூறித் துவங்குகிறார்.
ஜீவனான உயிர் மும்மலச் சேற்றில் அகப்பட்டுத் திகைத்து நிற்கும் காலமும்,
அச்ஜீவனுக்கு சிவபெருமான் திருவருளால் ஏற்படும் மேம்பாடுகளையும் கூறி
இறுதியாக அச்சிவபெருமானின் திருவடிக்குச் செல்லும் பெருநிலையை நமக்குக்
காட்டுகின்றார். ஜீவன் மலச்சுழியில் சிக்குண்டு இருக்கும்
தாழ்நிலையிலிருந்து, சிவனார் பெருங்கருணையால் சிவகதி அடையும் தன்னிகரற்ற
பெருநிலை பற்றிக் கூறுவதால் இது சிவபுராணமே.
திருவாசகம் பெரிதும் எளிய நடையைக் கொண்டதாக இருப்பது காரணமாக உரையின்
துணையின்றியே அன்பர்கள் படித்துப் பயன்பெறுவது. எனினும் சந்தி பிரித்து
தினமும் பேசும் மொழியில் வழக்கத்தில் இப்போது இல்லாத சில சொற்களுக்குப்
பொருளும், அங்கங்கே தொடர்புடைய சில கருத்துக்கள் குறிப்பதுவும்
அன்பர்களுக்கு பயன்படக்கூடும் என்ற கருத்துடன் இவ்வுரை வரையப்பட்டுள்ளது.
நேயத்தே நின்ற நிர்மலனார் பிழைகளை மன்னித்தும் தவிர்த்தும் அருள அவர்தம்
செம்மலரடிகளுக்குப் போற்றுதல்கள்.
தமிழ் பேசும் சிவனடியார்கள் வாயெல்லாம் மணக்கின்ற பதிகம் சிவபுராணம்.
கல்லையும் கனிய வைக்கும் எனப் புகழ் பெற்ற திருவாசகத்தின் முதற் பதிகமாக
அமைந்த சிறப்புப் பெற்றது. திருஐந்தெழுத்தை முதலாகக் கொண்டே துவங்கும்
இப்பதிகம் அடியார் தொழுகையில் சிறப்பிடம் பெற்றது இதன் பெருமையைப் பறை
சாற்றும் அறுபத்துமூன்று நாயன்மாரில் மூவர் பெண்கள்.
கி.பி. 3-4 ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த காரைக்கால் அம்மையார் நாயன்மாரில்
காலத்தால் மூத்தவர். தான் பிறந்து வாழ்ந்த ஊரின் பெயராலேயே அறியப்படும்
காரைக்கால் அம்மையாரின் இயற்பெயர் புனிதவதியார் ஆகும். மதுரையை ஆண்ட கூன்
பாண்டியன் என்ற பாண்டிய மன்னன் நின்றசீர் நெடுமாற நாயனார் என்ற
அறியப்படுகிறார். அவர் மனைவி மங்கையர்க்கரசியார் என்பவர் நாயன்மாரில்
மற்றொரு பெண் ஆவார். திருநாவலுரைச் சேர்ந்த சடையனார் என்ற நாயனாரின் மனைவி
இசைஞானியார் மூன்றாவது பெண் நாயனார் ஆவார். இவர்களின் மகன்
சுந்தரமூர்த்தியார் சைவக்குரவர் நால்வருள் ஒருவரும் நாயன்மாரில் ஒருவரும்
ஆவார்.
நாயன்மாரை அறிமுகம் செய்து வைத்தவர் சுந்தரமூர்த்தி நாயனார். அவர் பாடிய
நாயன்மார் 60 பேர். 63 பேர் அல்ல. சுவாமிமலைக்குப் படி 60. ஆண்டுகள் 60.
மனிதனுக்கு விழா செய்வதும் 60வது ஆண்டு. ஒரு நாளைக்கு நாழிகை 60. ஒரு
மணிக்கு நிமிடம் 60. ஒரு நிமிடத்துக்கு வினாடி 60. இப்படி 60 என்று தான்
கணக்கு வரும். 63 என்று வராது. சுந்தரமூர்த்தி நாயனார் சிவபெருமான் அடி
எடுத்துக் கொடுக்கப் பாடிய நாயன்மார் 60 பேர்தான். சுந்தரமூர்த்தி நாயனார்
மறைவுக்குப் பின் 100 ஆண்டுகள் கழித்து நம்பியாண்டார் நம்பி அடிகள்
சுந்தரமூர்த்தி நாயனார் பாடிய 60 நாயன்மாரைக் கொஞ்சம் விரிவாகப்
பாடுகின்றார். அப்போது 60 நாயன்மாரைப் பாடி, அந்த 60 நாயன்மாரைப் பாடிக்
கொடுத்த சுந்தரர், அவரைப் பெற்றுக் கொடுத்த அப்பா (சடையனார்), அம்மா
(இசைஞானியார்) ஆகியோரைச் சேர்த்து 63 ஆக ஆக்கினார்
arubathumoovarநமையாளும் நாயன்மார்கள் அறுபத்திமூவர்
தில்லைவாழ் அந்தணர்: சித்திரை-முதல்நாள்-தில்லையில் வாழும் தீட்சதர்கள். தொகையடியார்களின் ஒன்பதுபேரில் முதலாவதாக வணங்கப்படுபவர்கள்.
1. திருநீலகண்ட நாயனார்:தை-விசாகம். குயவர்-சோழநாடு, சிதம்பரம். அயலறியா
வண்ணிம் மனைவியின் சபதத்திற்கு உடன்படடு அவளைத் தீண்டாது, இளமையிலும்
முதுமையிலும் இல்லறம் நடத்தி இறைவன் திருவருளால் இளமை பெற்றார்.
2. இயற்பகை நாயனார்:மார்கழி-உத்திரம். வணிகர்-சோழநாடு- காவிரிப்பூம்பட்டினம். சிவனடியார்க்குத் தம் மனைவியிடமே தானமாகக் கொடுத்தவர்.
3. இளையான் குடிமாற நாயனார்:ஆவணி-பூசம். வேளாளர் இளையான்குடி. விதைத்த நெல் எடுத்து அலங்கெரித்து அடியார்க்கு அமுது அளித்தல்.
4. மெய்ப்பொருள் நாயனார்:கார்த்திகை-உத்திரம் குறுநில மன்னர்-நடுநாடு,
திருக்கோவலூர். வஞ்சித்துத் தம்மைக் கொல்லும் சிவவேடதாரியைக் காப்பாற்றித்
தம் உயிரைவிட்டவர்.
5. விறன்மீண்ட நாயனார்:சித்திரை-திருவாதிரை. வேளாளர்-மலைநாடு,
செங்குன்றூர். சுந்திர மூர்த்தி சுவாமிகள் திருத்தொண்டத் தொகை பாடுதற்குக்
காரணமாய் இருந்தவர்.
6. அமர்நீதி நாயனார்:ஆனி-பூரம். வணிகர்-சோழநாடு, பழையாறை, கோவணத்திற்கு
நிறையாக மனைவி, மக்கள், சொத்துக்களுடன் தன்மையும் சிவனடியார்க்குத்
தந்தவர்.
7. எறிபத்த நாயனார்-மாசி-அஸ்தம். சோழநாடு, கருவூர். பூக்குடலையைச்
சிவனடியாரிடமிருந்து பிடித்திழுத்துச் சிதறவைத்த பட்டத்து யானையை
வெட்டியவர்.
8. ஏனாதினாத நாயனார்-புரட்டாசி-உத்திராடம். சான்றோர்-சோழநாடு, எயினனூர்.
போர் புரியும் பகைவன் நெற்றியில் திருநீற்றைக் கண்டதும் அவனார்
கொல்லப்படும்படி நடந்து கொண்வர்.
9. கண்ணப்ப நாயனார்:தை-மிருகசீரிடம். வேடர்-தொண்டை நாடு-உடுப்பூர். ஆறே
நாளில் அளவுகடந்த பக்திசெய்து காளத்தியப்பருக்குத் தம் கண்ணை அப்பியவர்
10. குங்கிலியக் கலய நாயனார்:ஆவணி-மூலம். அந்தணர்-சோழநாடு,
திருக்கடவூர். மனைவியின் மாங்கல்யத்தை விற்றும் குங்கிலியம் வாங்கியவர்.
சாய்ந்த லிங்கத்தைக் கழுத்தில் பூமாலை கொண்டு நிமிர்த்தியவர்.
11. மானக்கஞ்சாற நாயனார்:மார்கழி-சுவாதி, வேளாளர்-கஞ்சாறூர்-திருமணம்
தொடங்கும்போது திருமணப் பெண்ணாகிய தமது மகளின் தலைமயிரை அறுத்துச்
சிவனடியாருக்குத் தந்தவர்.
12. அரிவட்டாய நாயனார்-தை-திருவாதிரை. வேளாளர்-சோழநாடு, கணமங்கலம். சிவ
நிவேதனத்துக்குரிய பொருள் கீழே சிந்தியதற்காகத் தமது கழுத்தை அரித்து
கொண்டவர்.
13. ஆனாய நாயனார்:கார்த்திகை-அஸ்தம். இடையர்-மழநாடு, மங்களவூர், பசு
மேய்க்கும் போது, ஜந்தெழுத்தைப் புல்லாங்குழலில் அமைத்துவாசித்தவர்.
14. மூர்த்திநாயனார்-ஆடி-கிருத்திகை. வணிகர்-பாண்டியநாடு, மதுரை.
சந்தனம் தருகின்ற திருப்பணியில் முட்டுப்பாடு நேரவே, முழங்கையை அரைத்தவர்.
திருநீறு, உத்திராட்சம், சடைமுடி ஆகிய மூம்மையால் உலகாண்டவர்.
15. முருக நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு, திருப்புகலூர்.
மலர்த்தொண்டு செய்து திருஞான சம்பந்தர் திருமணத்தில் முக்தி பெற்றவர்.
16. உருத்திர பசுபதி நாயனார்:புரட்டாசி-அஸ்வினி. அந்தனர்-சோழநாடு.
திருத்தலையூர். இரவும் பகலும் திருக்குளத்தில் கழுத்தளவு நீரில் நின்று
ஸ்ரீ ருத்ர மந்த்ரம் ஜபித்தவர்.
17.திருநாளைப்போவார் நாயனார்: புரட்டாசி-ரோகினி (நந்தனார்) புளையர்-
சோழநாடு. ஆத்தனூர். தில்லை நடராஜப் பெருமானைப் காணவிரும்பித் தீப் புகுந்து
முனிவராய் எழுந்து சிற்றம்பலவன் திருமுன்பு மறைந்தவர்.
18. திருக்குறிப்புதொண்ட நாயனார்:சித்திரை-சுவாதி. ஏகாலீயர்-தொண்டைநாடு
காஞ்சீபுரம். சிவனடியார்க்கு வாக்களித்தபடி மழையின் காரணமாக உடையை துவைத்து
உலர்த்தித்தர முடியாமல் போனதால் தமது தலையை கல்லின்மீது மோதிக் கொண்டவர் .
அறுபத்து மூவரையும் தெரிந்து கொள்ள இணைந்திருங்கள் தொடர்ந்து !
1lord-shiva9. சண்டேஸ்வர நாயனார்:தை-உத்திரம். அந்தணர்-சோழநாடு,
திருச்சேயஞ்ஞலூர் அபிஷேகப்பாற்குடத்தை இடரியை தந்தையின் காலை வெட்டித்
தொண்டர்க்கு தலைவனாக (சண்ணிப் சப்பதம்) இருக்கும் அருள் பெற்றவர்.
20. திருநாவுக்கரச நாயனார்:சித்திரை-சதயம், வேளாளர்-நடுநாடு,
திருவாமூர், ஐந்தெழுத்து ஒதி கருங் கல்லின்மேல் கடலில் மிதந்து கரையேரிப்
பல தேவாரப்பாடல்கள் பாடி கைத்தொண்டு செய்து முக்தி பெற்றவர்.
21. குளச்சிறை நாயனார்:ஆவணி-அனுஷம், பாண்டிய நாடு-மனமேற்குடி, அரசன்
சமணனாய் இருந்தபோதும் தாம் சிவனடியாரை வழிபட்டார். திருஞானசம்பந்தரை
அழைத்துவந்து அரசனையும் நாட்டினையும் சைவ மாக்கியவர்.
22. பெருமிழலைக் குரும்ப நாயனார்:ஆடி-சித்திரை, பெருமிழலையூர் சுந்திர
மூர்த்தி ஸ்வாமிகளை வழிபட்டு, அவர் கயிலை செல்வதையறிந்து யோகத்தால் தானும்
கயிலை சென்றவர்.
23. காரைக்கால் அம்மையார்:பங்குனி-ஸ்வாதி (பேயார்) , வணிகர்-சோழநாடு.
காரைக்கால், சிவபெருமானை வேண்டி மாம்பழம் பெற்றவர். பேய் வடிவம் பெற்றவர்.
ஆலங்காட்டில் ஈசனாடலையும் பெற்றவர்.
24. அப்புதியடிகள் நாயனார்:தை-சதயம். அந்தணர்-சோழநாடு. திங்களூர்.
பிள்ளை இறந்ததையும் மறைத்து திருநாவுக்கரசு ஸ்வாமிகளுக்கு அமுது அளித்தவர்.
25. திருநீலநக்க நாயனார். வைகாசி-மூலம்:அந்தணர்-சோழநாடு. சாத்தமங்கை.
அன்போடு சிவலிங்கத்தின் மீதிருந்த சிலந்தியை ஊதியதால் எச்சில் பட்டதென்று
மனைவியை விட்டுச்சென்றவர். பாணர்க்கு வேதிகையில் இடம் தந்தவர்.
திருஞானசம்பந்தர் திருமணத்தை நடத்தி முக்தி பெற்றவர்.
26. நமிநந்தி அடிகள் நாயனார்:வைகாசி-பூசம். அந்தணர்-சோழநாடு.
ஏமப்பேறூர். தண்ணீரால் விளக்கெரித்தவர். திருவாரூர்ப் பிறந்தாரை எல்லாம்
சிவசாரூப்பியராகக் கண்டவர்.
27. திருஞானசம்பந்த நாயனார்:வைகாசி-மூலம். அந்தணர்-சோழநாடு. சீகாழி.
உமாதேவியாரால் ஞானப்பால் ஊட்டப்பெற்றவர். தேவாரம்பாடி எலும்பைப்
பொன்னாக்கியவர். பல அற்புதங்கள் செய்த இவர் தமது திருமணத்திற்கு வந்தவர்கள்
அனைவருக்கும் முக்தி தந்தவர்.
28. ஏயகோன் கலிக்காம நாயனார்:ஆனி-ரேவதி. வேளாளர் சோழநாடு திருப்பெரும்
மங்களம். சிவபெருமானைப் தூதராகவிடுத்த வண்றொண்டரை இகழ்ந்து பின்பு
திருவருள் விளையாட்டால் அவருடைய நண்பரானவர்.
29, திருமூல நாயனார். ஐப்பசி-அசுவினி:இடையர்-சோழநாடு, சாத்தனூர். மூலன்
உடலில் தாம் புகுந்து, மூவாயிரம் ஆண்டிருந்து, திருமந்திரம் அருளிச்
செய்தவர்.
30. தண்டியடிகள் நாயனார்-பங்குனி-சதயம். சோழநாடு-திருவாரூர். பிரவிக்
குருடாக இருந்தும் திருவாரூர் குளத்தை, கரையில் குச்சி கட்டி, இடையே கயிறு
கட்டி திருக்குளப்பணி செய்து குருடு நீங்கிச் சமணரை வென்றவர்.
31. மூர்க்க நாயனார்-கார்த்திகை, மூலம். வேளாளர், தொண்டைநாடு,
திருவேர்க்காடு. சூதாட்டத்தில் கிடைக்கும் லாபத்தைக் கொண்டு
சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
32. சோமாச்சிமாற நாயனார்-வைகாசி-ஆயில்யம். அந்தணர். சோழநாடு. திரு
அம்பர். வேத வேள்வி செய்து, சாதிமத பேதமின்றி, பஞ்சாட்சரவிதிப்படி
அடியயார்களுக்கு அன்னதானம் செய்தவர்.
33. சாக்கிய நாயனார்:மார்கழி-பூராடம். வேளாளர்-திருச்சங்கமங்கை. சமணக்
கோலமாயினும் மனதார சிவபூசை செய்தவர். மனதில் மலராக எண்ணி இறைவ மீது
இட்டகற்களை இறைவன் மீது இட்டகற்களை இறைவன் மலராக ஏற்று அருள் பெற்றவர்.
34. சிறப்புலி நாயனார்-கார்த்திகை-பூராடம். அந்தணர்-சோழநாடு. திரு
ஆக்கூர். குல ஆசாரவிதிப்படி, வேதம் ஒதியும், ஒதுவித்தும், சிவனடியைச்
சிந்தித்தும் அடியார்கட்கு, அமுதும் பொருளும் தந்தவர்.
35. சிருத்தொண்ட நாயனார்-சித்திரை-பரணி. மாமாத்திரப் பிராமணர்-சோழநாடு,
திருச்செங்காட்டாங்குடி வாதாவியைப் போரில் வென்றவர். சிவனடியார்க்குத் தமது
ஒரே பிள்ளையைக் கறியாகச் சமைத்து வைத்தவர்.Lord-Shiv
36. சோமான் பெருமாள் நாயனார்-ஆடி, சுவாதி (கழறிற்றறிவார் நாயனார்)
அரசர், மலைநாடு, கொடுங்கோளூர். நடராஜர் பாதச் சிலம்பொலி கேட்கக் காலம்
தகுந்தமையால் சுந்திர மூர்த்தி ஸ்வாமிகள் தோழமை பெற்றவர். சிவ
பெருமானுடையதிருமுகப் பாசுரம் பெற்றவர். கயிலை சென்று ஞானவுலா பாடியவர்.
37. கணநாத நாயனார்-ஆடி-திருவாதிரை. அந்தணர், சோழநாடு, சீர்காழி.
சிவனடியாரைப் போற்றுவதோடு, சிவநெறிப் பணிகள் செய்பவருக்கு பயிற்சி
அளித்தவர். திருஞான சம்பந்தரை வழிபட்டவர்.
38. கூற்றுவ நாயனார்-ஆடி-திருவாதிரை. குறுநில மன்னர், திருக்களத்தை.
தில்லைவாழ் அந்தணர் தமக்கு முடிசூட்ட மறுக்கவே, தில்லையம்பலவன்
திருவடிகளையே முடியாகச் சூடப்பெற்றவர்.
39. புகழ்ச்சோழ நாயனார்:ஆடி-கிருத்திகை. அரசர் சோழநாடு. உறையூர்.
பகைவனது அறுபட்ட தலையில் சிவ சின்னமாகிய சடையிருப்பதைக் கண்டு அஞ்சி
உயிர்விட்டவர்.
40. நரைசிங்க முனையரைய நாயனார்-புரட்டாசி-சதயம். குருநில
மன்னர்-நடுநாடு. சுந்தரமூர்த்தி சுவாமிகளை வளர்த்தவர். திருவாதிரை தோறும்
சிவனடியார்களுக்கு அன்னமிடுவதுடன் 100 பொற்காசுகள் வழங்குவார். சிவவேடம்
பூண்ட காமக்குறி மலர்ந்த தூதர்களையும் வணங்கியவர்.
41. அதிபந்த நாயனார்-ஆவணி-ஆயில்யம். நுளையர் (மீன் பிடிப்பவர்)
சோழநாடு-நாகப்பட்டினம். நவரத்தினம் இழைத்த பொன்மீனைத்தாமே வைத்துக்
கொள்ளாமல் சிவார்பணம் செய்தவர்.
42. கலிக்கம்ப நாயனார்-தை-ரேவதி. வணிகர்-நடுநாடு. பெண்ணாடகம். தமது பழைய
வேலையாள் சிவனடியாராக வந்தபோது, தாம் அவனை வழிபட்டு, வழிபடாத தமது மனைவி
கையை வெட்டியவர்.
43. கலிய நாயனார்:ஆடி-கேட்டை. செக்கர்- (எண்ணெய் வியாபாரி)
தொண்டைநாடு-திருவெற்றியூர். திருவிளக்கு ஏற்ற எண்ணெய் இல்லாததால் தமது
இரத்தத்தைக் கொண்டு எரிக்க முயன்றவர்
44. சக்தி நாயனார்-ஐப்பசி-பூசம். வேளாளர்-சோழநாடு. வரிஞ்சியூர். சிவனடியாளர்களைக் குறை கூறுபவர்களின் நாக்கை அறுத்தவர்.
45. ஐயடிகள் காடவர்கோன் நாயனார்-ஐப்பசி-மூலம். குறுநில மன்னர்-
தொண்டைநாடு. காஞ்சிபுரம். பதவியை வெறுத்துத் ஸ்தல யாத்திரை செய்தவர்.
க்ஷேத்திர வெண்பாவால் நிலையாமையைக் கூறியவர்
46. கணம்புல்ல நாயனார்-கார்த்திகை-கிருத்திகை. இருக்குவேளூர்.
புல்விற்று நெய்கொண்டு திருவிளக்கெரித்தவர். நெய்யின்மையால் திருப்புலீஸ்வர
சிவன் சன்னதியில் தமது தலைமயிரை விளக்காக எரித்தவர்.
47. காரிநாயனார்-மாசி-பூராடம்.. சோழநாடு. திருக்கடவூர். கோவைப்பாடி பொருள்பெற்று, ஆலயப்பணி செய்தவர்.
48. நின்றசீர் நெடுமாற நாயனார்-ஐப்பசி-பரணி. அரசர்-பான்டிய நாடு. மதுரை.
திருஞானசம்பந்தர் தந்த திருநீற்றால் சுரம் நீக்கியவர். அவர் திருவாக்கால்,
கூன் நிமிரப்பெற்று சைவரானவர்.
49. வாயிலார் நாயனார்-மார்கழி-ரேsivan_par_jpg1வதி. வேளாளர், தொண்டைநாடு-மயிலாப்பூர். மானசீகமான ஞானபூஜை செய்தவர்.
50. முனையடுவார் நாயனார்-பங்குனி-பூசம். வேளாளர், சோழநாடு, திருநீடூர். கூலிக்குப் போர் செய்து அக்கூலிகொண்டு சிவனடியாரை வழிபட்டவர்.
51. கழற்சிங்க நாயனார்-வைகாசி-பரணி. குறுகிய மன்னர்-சிவபூஜைக்குறிய பூவை
முகர்ந்ததற்காகத் தமது மனைவியின் மூக்கை ஒரு சிவனடியார் அறுத்த தண்டனை
போதாது என்று, அவள் கைகளையும் வெட்டியவர்.
52. இடங்கழி நாயனார்-ஐப்பசி-கார்த்திகை. அரசன்-கோனாடு, கொடும்பாளூர்.
அடியார் வழிபாடு செய்ய நெய் நெல் திருடினவர்க்கு மேலும் பொருளும் நெல்லும்
தந்தவர்.
53. செருத்துணை நாயனார்-ஆவணி-பூசம். வேளாளர், சோழநாடு, தஞ்சாவூர்.
கழற்சிங்க நாயனாருடைய மனைவி, பூஜைக்குறிய பூவை முகர்ந்ததற்காகத் அவர்
மூக்கை அரித்தவர்.
54. புகழ்த்துணை நாயனார்-ஆவணி-ஆயில்யம். ஆதிசைவர். செருவிலிபுத்தூர்.
சிவபூஜைக்கு உதவியாக அரிசிற்கரைப்புத்தூர் சிவபெருமானால் பஞ்சகாலத்தில்
காசு அளிக்கப்பெற்று தொண்டு செய்தவர்
55. கோட்புலி நாயனார்-ஆடி -கேட்டை. வேளாளர். சோழநாடு.
திருநாட்டியத்தான்குடி. சிங்கடி, வனப்பகை என்ற இரண்டு புதல்வியரைத் சுந்தர
மூர்த்தி ஸ்வாமிக்கு அரிப்பணம் செய்தவர். சிவபூஜைக்குரிய நெல்லையுன்ட
சுற்றத்தார் அனைவரையும், குழந்தை உட்பட அனைவரையும் கொன்றவர்.
56. பூசலார் நாயனார்-ஐப்பசி-அனுஷம். அந்தணர். தொண்டைநாடு. திருநின்றவூர். மனத்தினாலேயே கோயில்கட்டிச் சிவ வழிபாடு செய்தவர்.
57. மங்கையர்க்கரசியார்-சித்திரை-ரோகினி. (மாணியார்) அரசியார்,
பாண்டியநாடு, திருஞானசம்பந்தரை வரவழைத்துத் தமது கணவரையும், பாண்டிய
நாட்டையும் சைவமாக்கியவர்.
58. நேச நாயனார்-பங்குனி-ரோகிணி. சாலியர்-கம்பீரநகரம் சிவனடியார்களுக்கு உடையும் கோவணமும் செய்து கொடுக்கும் பணியைச் செய்தவர்.
59. கோச்செங்கட்சோழ நாயனார்:மாசி-சதயம். அரசர் சோழநாடு. எழுபது சிவாலயங்கள் கட்டியவர். முப்பிறவியில் சிலந்தியாகப் பூஜை செய்தவர்.
60. திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார்-வைகாசி-மூலம். பாணர், நடுநாடு-
திருஎருக்கத்தம்புலியூர், திருஞானசம்பந்தருடன் சென்று, யாழ்த்தொண்டு
புரிந்தவர்.
61. சடைய நாயனார்-மார்கழி-திருவாதிரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர்.
சுந்திரமூர்த்தி சுவாமிகளைப் பிள்ளைகளாகப் பெற்றவர். அவருக்குச் சடங்கவி
சிவாச்சாரியார் புதல்வியைத் திருமணம் செய்விக்க முயற்சித்தவர்.
62. இசைஞானியர்-சித்திரை-சித்திரை. ஆதிசைவர், நடுநாடு, திருநாவலூர்,
சுந்திர மூர்த்தி ஸ்வாமிகளைப் பிள்ளையாகப் பெற்று வளர்த்த பெண்மணியார்.
63. சுந்தரமூர்த்தி நாயனார்-ஆடி-சுவாதி. ஆதிசைவர், நடுநாடு-திருநாவலூர்.
திருத்தொண்டர் தொகைபாடியவர். இறைவனைத் தூது அனுப்பியவர். முதலையுண்ட மகனா
வருவித்தவர்.
இந்துசமயம் புராணங்கள்.பழங்கால விஞ்ஞானம்.கலச்சாரத்தில் உள்ளது விஞ்ஞானம் மெய்ஞானம்,அறிவு அறிவியல் அறிவோம்,
திங்கள், 26 செப்டம்பர், 2016
முப்படிவம் (திரிமூர்த்தம்)
முப்படிவம் (திரிமூர்த்தம்)
மாந்தர்க்கு முதலாவது இறப்பச்சம்பற்றி அழிவுணர்ச்சியும் பின்பு காப்புணர்ச்சியும், அதன்பின் படைப்புணர்ச்சியும் தோன்றுவதே இயல்பு. முதலாவது சிவனுக்கு அழிப்புத் தொழிலும் பின்பு திருமாலுக்குக் காப்புத்தொழிலும் கூறப்பட்டன. பின்பு படைப்புணர்ச்சி தோன்றியபோது, அதுவும் சிவனுக்கே யுரித்தாக்கப்பட்டது, ஒடுங்கின இடத்திலிருந்தே ஒன்று தோன்றவேண்டும் என்னும் கருத்துப்பற்றி.
இதே,

“தோற்றிய திதியே யொடுங்கிமலத் துளதா
மந்த மாதி யென்மனார் புலவர்”
என்று சிவஞான போதத்திற் கூறப்படுகின்றது.
பிராமணர் தென்னாட்டிற்கு வந்தபின், படைப்புத் தொழிலைப் பிரித்துத் தங்கள் குலமுதல்வராய பிரமாவினது என்று கூறிப் பழைமை வரைந்தனர். ஆயினும் தமிழர் ஒப்புக் கொள்ளாமையால் அவருக்குக் கோயில்வழிபாடேற்படவில்லை. இதற்குப் பிற்காலத்தில் ஒரு கதை கட்டப்பட்டது.
பிராமணரின் குலமுதல்வரே பிரமாவென்பது, பிரமஸ்ரீ, பிரமதாயம் என்னும் பிராமணரைக் குறித்த சொல்வழக்குகளாலும், வீரமகேந்திரத்திலிருந்த பிரமா கந்தனொடு போய்ச் சேர்ந்து கொண்டமையால், அடுத்த அண்டத்திலிருந்த பிரமாவைச் சூரபன்மன் வரவழைத்தான் என்னுங் கந்தபுராணச் செய்தியாலும் உணரப்படும்.
திருமால் முகில்வடிவின ராதலின், மேகத்தைச் சமுத்திர மென்னும் தங்கள் மறைவழக்குப்படி, கடலை அவர்க்கு இடமாக்கினர் ஆரியர். திருமால் வணக்கம் வர வரச் சிறந்து வந்தமையால், பிரமா திருமாலின் மகனெனப் பட்டார் போலும். ஆரிய மறையோதுவதே சிறந்த கல்வி என்னுங் கருத்தில், கலைமகள் (சரஸ்வதி) பிரமாவின் மனைவியாகக் கூறப்பட்டாள். தமிழர் கல்வியைத் தமிழ்மாது என மொழிப்பெயராற் கூறினரே யன்றிக் கலைப்பெயராற் கூறவில்லை, ஆரியம் வருமுன் தமிழொன்றே தமிழகத்தில் வழங்கினமையின்.
பண்டைக்காலத்தில் ஒவ்வோர் அரசனிடத்தும், ஒவ்வொரு கருமான் அல்லது தச்சன் இருந்தான். அவனே ஊர்களை அல்லது நகர்களைக் கட்டுபவனாதலின், 'உலகக் கருமான்' (விசுவகர்மா) எனப்பட்டான். 'உலக விடைகழி' என்பதில் உலகம் நகரைக் குறித்தலையும், கருமான் என்பது கொல்லன் பெயராதலையுங் காண்க. விசுவகர்மா என்பது உலகக் கருமான் என்பதின் மொழிபெயர்ப்பே.
உலகக் கருமானுக்கு அரசத் தச்சன் என்றும் பெயருண்டு. ஒ.நோ: Gk. architekton - archi, chief, and tekton, a builder, E. architect.
ஊரைக் கட்டுவது தச்சனாதலாலும், கொல்லருக்குள் கருமான், தச்சன், கற்றச்சன், கன்னான், பொற்கொல்லன் என ஐம்பிரிவிருப்பதாலும். உலகத்தைப் படைத்தவன் முதற் கருமான் என்றும், அவன் ஐம்முகன் என்றும் ஒரு பழைமை வழக்கு தொன்றுதொட்டுக் கம்மாளர்க்குள் வழங்கி வந்திருக்கின்றது.
பிராமணர் தம் குலமுதல்வராகிய பிரமனைப் படைப்புத் தெய்வமென்றும் நான்முகனென்றும் கூறியபோது, கம்மாளர்க்கு அவர்மீது பகையுண்டானதாகத் தெரிகின்றது. அதுவே இன்றும் தொடர்ந்து வருகின்றது. ஆரிய மறையை நான்காகப் பகுத்தது பிற்காலமாதலின், பிரமாவை நான்முகன் என்றது திசைபற்றி அல்லது குலப்பிரிவுபற்றியே யிருத்தல் வேண்டும்.
மொழி ஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணர்.

அகத்திய மாமுனி
அகத்திய மாமுனி www.danvantarinadi.com
இலங்கை மன்னர் இராவணனை தம் இசை திறத்தால் வென்றார் அகத்தியர். தூங்கெயிலெறிந்த தொடித்தோட் செம்பியன் காலத்தில் காவிரி பூம்பட்டிணத்தில் இந்திர விழாவை எடுப்பித்தார். புதுச்சேரிக்கு அருகிலுள்ள ‘உழவர் கரை’யில் ஆசிரமம் அமைத்து வேதபுரி பல்கலைக் கழகத்தில் தமிழை போதித்தார். எனவே அவர் தங்கியிருந்த பகுதி ‘அகத்தீஸ்வரம்’ என்று அழைக்கப்பட்டு அங்கு பெரிய சிவாலயம் கட்டப்பட்டது. அதனை அகத்தீஸ்வரமுடையார் ஆலயம் என்றும் கூறுகின்றனர்.
சித்தராய் விளங்கிய அகத்தியரை பற்றிய அகத்தியர் காவியம் பன்னிரெண்டாயிரம் வாயிலாக சில கருத்துக்களை மட்டுமே தெரிந்து கொள்ள முடிகிறது. அகத்தியர் அனந்தசயனம் என்ற திருவனந்தபுரத்தில் சமாதியடைந்ததாகக் கூறப்படுகிறது. ஒரு சிலர் அவர் கும்பகோணத்தில் உள்ள கும்பேசுவரர் கோவிலில் சமாதி கொண்டிருப்பதாகக் கூறுகின்றனர். அகத்தியர் தென்நாடு வந்த வரலாற்றை ஆய்வியல் நோக்கில் திரு.N. கந்தசாமி பிள்ளையின் சித்த மருத்துவ வரலாறு நூலில் காணலாம்.
அகத்திய மாமுனி சித்த வைத்தியத்திற்கு செய்த பணி அளவிடற்கரியது. பல நோய்களுக்கும் மருத்துவ சந்தேகங்களுக்கும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அகத்தியர் பெயரில் வெளியாகியுள்ள சமரச நிலை ஞானம் என்னும் நூலில் உடம்பில் உள்ள முக்கியமான நரம்பு முடிச்சுகள் பற்றிய விளக்கம் காணப்படுகிறது. அகத்தியர் ஐந்து சாஸ்திரங்கள் என்னும் நூலில், பதினெட்டு வகையான மனநோய் பற்றியும் அதற்குரிய மருத்துவம் பற்றியும் விளக்கப்பட்டிருக்கின்றன.
அகத்தியர் அஷ்ட மாசத்தில் குழந்தைகளுக்கு ஏற்படும் தோஷங்கள் பற்றி கூறியுள்ளார். மேலும் அவர் எழுதிய நூல்களில் கிடைத்தவை:
1. அகத்தியர் வெண்பா
2. அகத்தியர் வைத்தியக் கொம்மி
3. அகத்தியர் வைத்திய ரத்னாகரம்
4. அகத்தியர் வைத்தியக் கண்ணாடி
5. அகத்தியர் வைத்தியம் 1500
6. அகத்தியர் வைத்திய சிந்தாமணி
7. அகத்தியர் கர்ப்பசூத்திரம்
8. அகத்தியர் ஆயுள் வேத பாஷ்யம்
9. அகத்தியர் வைத்தியம் 4600
10. அகத்தியர் செந்தூரம் 300
11. அகத்தியர் மணி 4000
12. அகத்தியர் வைத்திய நூல் பெருந்திரட்டு
13. அகத்தியர் பஸ்மம் 200
14. அகத்தியர் நாடி சாஸ்திரம்
15. அகத்தியர் பக்ஷணி
16. அகத்தியர் கரிசில் பஸ்யம் 200
17. சிவசாலம்
18. சக்தி சாலம்
19. சண்முக சாலம்
20. ஆறெழுத்தந்தாதி
21. காம வியாபகம்
22. விதி நூண் மூவகை காண்டம்
23. அகத்தியர் பூசாவிதி
24. அகத்தியர் சூத்திரம் 30
போன்ற நூலகளை இவர் எழுதியதாகக் கூறப்படுகிறது. மேலும்
25. அகத்திய ஞானம் என்னும் அகத்தியம் என்னும் ஐந்திலக்கணம்
26 அகத்திய சம்ஹிதை என்னும் வடமொழி வைத்திய நூலும் இவரால் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
அகத்தியர் சித்தர் வரலாறு முற்றிற்று.
துன்பங்கள் தீர்க்கும் ஆன்மீக ரகசியங்கள்
1.ஒரு வளர்பிறை செவ்வாய்க்கிழமை அன்று தொடங்கி செவ்வாய்க்கிழமை தோறும்
ஒரு பசுவுக்கு நாட்டு வாழைப்பழம் வாங்கிக் கொடுத்துவர வறுமை நீங்கி செல்வ
நிலையில் உயர்வு உண்டாகும்.
2.தொழில் முடக்கம் நீங்கி தொழில் விருத்தி அடைய
ஒரு கரும்புள்ளி இல்லாத நல்ல எலுமிச்சம்பழம் ஒன்று வாங்கி கடை,அலுவலகம் முழுவதும் வளாகம் முழுவதும் வெளியில் நின்று நாகு துண்டாக நறுக்கி தெற்கு முகமாக நின்று குங்குமம் தடவித் திசைக்கு ஒன்றாக எறிந்து விடவும். கடை அலுவலகம் இவற்றில் இருந்த தொழில் முடக்கம் நீங்கி தொழில் சிறப்பாக நடைபெறும்.இதை செவ்வாய்க்கிழமை அன்று செய்யவும்.வியாபாரம் இல்லாமல் அடைத்து வைத்தட கடைகளில் இதை செய்து பின் கடை திறந்து வியாபாரம் செய்யத் தொழில் சிறக்கும்.
3.திருமணத்தடை,வறுமை,வேலையின்மை மற்றும் தோஷம் உள்ளவர்கள் நல்லெண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து கொஞ்சம் பஞ்சகவ்யம் சேர்த்து குளித்து அருகில் உள்ள ஆலயம் சென்று அர்ச்சனை செய்து கொள்ள தோஷங்கள் விரைவில் நீங்கி நல்வாழ்வு உண்டாகும்.
ஆண்கள் - சனிக்கிழமை
பெண்கள் - வெள்ளிக்கிழமை
4.பொருளாதாரம் உயர:-
ஞாயிற்றுக்கிழமையும் பூசம் நட்சத்திரமும் கூடிய நாளன்று அதிகாலையில் நாயுருவிச் செடிக்கு முறைப்படி காப்புக் கட்டி சாபநிவர்த்தி செய்து பிடுங்கி
அதைக் கையில் வைத்துக்கொண்டே சண்டி நவாக்ஷரி மந்திரம் 1008 உரு ஜெபம் செய்து பின்னர் வெள்ளைநிறப் பட்டு அல்லது பருத்தித் துணியை மஞ்சள் கலந்த தண்ணீரில் நனைத்து அந்தத் துணியால் நாயுருவிச் செடியைச் சுற்றவும். இதைக் கடை,அலுவலகம், வீடுகளில் வைக்க பொருளாதார நிலை உயர்வடையும்.
5.இரவில் கை,கால் ,முகம் கழுவிய பின்னர் தூங்கினால் துஷ்ட சக்திகள் தொல்லை செய்யாது.இரவில் தானாக விந்தி சக்தி வெளியேறாது.
6.அடிக்கடி ஆபத்துகளைச் சந்தித்து வருபவர்கள்,அஷ்டமத்துச் சனி நடப்பவர்கள், அஷ்டமாதிபதி தசை அல்லது புத்தி நடப்பவர்கள் மஹாம்ருத்யுஞ்சய மந்திரம் ஜெபித்து பின் வெளியே கிளம்பினால் விபத்துகள் இன்றி வீடு திரும்பலாம்.
7.அரச மரத்தின் அற்புத சக்தி :
1. தீரா நோய் தீர
ஞாயிற்றுக்கிழமை தவிர மற்ற நாட்களில் தினமும் மதியம் 12:00 முதல் 1:30 மணிக்குட்பட்ட வேளையில் அரசமர வேரைத் தொட்டு வணங்கி வர தீராத நோய்கள் தீரும்.குறிப்பிட பகுதியில் பாதிப்பு ,நோய் இருந்தால் பாதிப்பு / நோய் உள்ள பகுதியில் வேரைத் தொட்டு
வைக்கவும்.விரைவில் குணம் கிடைக்கும்.
2.ஞாயிற்றக்கிழமை அன்று மட்டும் அரச மரத்தைத் தொடக்கூடாது .
3.குறைந்த அல்லது உயர் ரத்த அழுத்த நோய் உள்ளவர்கள் ,அதிகம் உணர்ச்சி வசப்படுபவர்கள் இனிப்பு பண்டம் அல்லது சர்க்கரை கலந்த நீரை அரச மர வேரில் விட விரைவில் ரத்த அழுத்த நோய் பாதிப்பு குறையும்.
4.தினமும் கிழக்கு முகமாக நின்று அரச மரத்திற்கு நீர் விட்டு வர பித்ரு தோஷ பாதிப்புகள் குறையும்.
5.ஆயுள் தோஷம் உள்ளவர்கள் (அற்பாயுள் ) சனிக்கிழமை தோறும் அரச மரத்திற்கு நீர் விட்டு தொட்டு வணங்கி வர ஆயுள் கூடும்.

சித்தர் அறிவியல்,
சித்த மருத்துவம்,
ஆயுர்வேதம்,
நாடி சோதிடம்
சித்த மருத்துவம்,
ஆயுர்வேதம்,
நாடி சோதிடம்
நாடி சோதிடம் நம்மில் பலர் ஆச்சர்யத்துடன் மலைக்கவைக்கும் அதிசயம்.
சித்தர்களால் உலகிற்கு அளிக்கப் பட்ட கொடை, இதுவரை பிறந்த அல்லது இனி
பிறக்கப் போகிற ஒவ்வொரு மனிதன் குறித்து என்றைக்கோ எழுதி வைத்துவிட்டுப்
போனா விலைமதிப்பில்லா பொக்கிஷம்...இப்படியெல்லாம்தான் நாம் புரிந்து
வைத்திருக்கிறோம்.
இதைக் குறித்து விரிவாய் பார்ப்பதற்கு முன்னர், இம்முறை குறித்த ஓர் அறிமுகம். அதாவது ஒருவரின் கை ரேகையினை மட்டுமே வைத்து அவருக்கான ஏடை தேடியெடுத்து அவரின் பலன் சொல்வதுதான் இந்த முறை. ஆண்களுக்கு வலது கை பெருவிரல் ரேகையும், பெண்களுக்கு இடது கை பெருவிரல் ரேகையும் தேவைப் படும்.இதில் இன்னொரு நிபந்தனை கூட உண்டு. உங்களுக்கு விதிக்கப் பட்டிருந்தால் மட்டுமே நீங்கள் நாடி சோதிடம் பார்க்க முடியும்.
உங்களுக்கான ஏடுகள் என சிலவற்றை எடுத்து வந்து உங்களிடம் வாசித்துக் காட்டுவர். அதில் எது உங்களின் விவரங்களோடு பொருந்தி வருகிறதோ, அதுவே உங்களுக்கான ஏடு. அதில் உங்களுக்கு கூறப்பட்டிருக்கும் பலன்களை சோதிடர் வாசித்துக் காட்டுவார். நீங்கள் ஆச்சர்யத்தில் வாய் பிளந்து கேட்டுக் கொண்டிருப்பீர்கள்.
இனி இது தொடர்பாக என்னுடைய தனிப்பட்ட அவதானிப்புகள் சிலவற்றை பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
சித்தர்களின் பெயரில் சொல்லப்படும் மூட நம்பிக்கைக்களையோ மலிவான வியாபார உத்திகளையோ நான் ஏற்றுக் கொள்வதாக இல்லை. அதன் பொருட்டே எனக்கான தேடலை தொடங்கி நான் அறிந்த மற்றும் உணர்ந்த தகவல்களை பதிவும் செய்கிறேன்.
இதனை சொல்வதால் நான் சித்தர்களின் பாடல்களையோ, அவர்கள் சொன்ன செய்திகளையோ சந்தேகிக்கிறேன் என்று அர்த்தமில்லை, பலரும் நம்பாத சித்தர்களின் ரசவாதம், ஜோதிடம் போன்றவற்றில் அதீத நம்பிக்கை மற்றும், ஆர்வத்துடனும் தொடர்ந்து தேடுதல் செய்து வருகிறேன்.
நான் புரிந்து கொண்ட வகையில் சித்தர்கள் நாடி என்பது ஒரு குறிப்பிட்ட தனி மனிதர்களை சார்ந்ததாக இல்லை. மேலும் அவர்கள் தனிமனிதர்கள் குறித்து பெரிதாக எதுவும் எழுதியதும் இல்லை. தனது குரு, அல்லது சீடர் பற்றிய குறிப்புகளைத் தவிர வேறு எதுவும் குறிப்பிட்டு சொல்ல கூடியாதாக இல்லை.
நிதர்சனம் இப்படி இருக்க உலகில் பிறந்த, வாழ்கிற, பிறக்கவிருக்கின்ற மனிதர்கள் எல்லோருக்கும் தனிதனி ஏடுகள் எழுதிவைத்தார்கள் என்றால் அதன் உண்மை தன்மை குறித்த ஐயப்பாடுகள் ஏற்படுவது இயற்கையே.
மேலும் அவர்கள் பாடல்கள் எல்லாம் மறை பொருளில் பாடப்பட்டவைகளே, அப்படி இருக்க, இந்த நாடி ஜோதிடத்தில் மட்டும் தெளிவாக எழுதியிருப்பதன் மர்மம் என்ன? என்பதுதான் என்னுடைய தேடலின் துவக்க புள்ளி.
சித்தர்கள் சோதிடம் பற்றி எதுவும் சொல்ல வில்லை என்று அர்த்த மல்ல, சித்தர்கள் சோதிடத்திலும் வல்லவர்களே, அதில் எனக்கு எள்ளளவும் சந்தேகமில்லை. ஆனால் அவர்கள் ரேகைகளை கொண்டு எழுதியதாக எந்த ஆதாரமும் இல்லை என்று தான் சொல்கிறேன்.
அப்படியானால் சித்தர்கள் சொன்ன நாடி என்பது என்ன?
சித்தர்கள் சொன்ன நாடி என்பது நான் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்ட, கையைப் பிடித்து நெட்டை வாக்கில் பெருவிரலுக்கு மேலே இருக்கும் ஆரை எலும்பின் மேலே ஓடும் நாடியை மணிக்கட்டுக்கு ஓரங்குலம் மேலாக மூன்று விரல்களால் சமமாக மெதுவாய்த் தொட்டு நாடியைக் கண்டு கொண்ட பின் விரல்களை மாற்றி மாற்றிப் பார்த்தால் நாடி நடையைத் தெரிந்து கொள்ளும் முறை மட்டுமே...
இதற்க்கு உதாரணமாக அகத்தியர் நாடியின் ஒரு சில பாடல்களை கீழே தந்துள்ளேன்...
"கரிமுகனடியை வாழ்த்தி கைதனில் நாடிபார்க்கில்
பெருவிரலங்குலத்தில் பிடித்த நடுவே தொட்டால்
ஒருவிரலோடில் வாதம் முயர்நடுவில் பித்தம்
திருவிரல் மூன்று லோடிற் செத்தும நாடியாமே."
- அகத்தியர் நாடி -
"ஆகிய நாடி மூன்றும் படபடவேன்றோடிற் சென்னி
வாக்கினிலன்னம் கோழி மயிலென் நடக்கும் வாதம்
எகியவா மையட்டை இவையென நடக்கும் பித்தம்
போகியே தவளை பாம்பு போல்வான் சேத்துமம் தானே"
k.kanaail meganathan.by.www.danvantarinadi.com

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)