லண்டன்: சூரிய ஒளி உடலில் பட்டால், ரத்த அழுத்தம் மற்றும் புற்று நோய்
குறையும் என லண்டன் எடின்பரோ பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள்
கண்டறிந்துள்ளார்கள்.
மனித உடலுக்கு சூரிய ஒளியால் வைட்டமின் டி சத்துக்கள் , மின்சாரம் உள்ளிட்ட
பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதனால் தான்
நம் முன்னோர்கள் சூரிய நமஸ்காரம் செய்வதை வாடிக்கையாகக் கொண்டு ஆரோக்கியமாக
வாழ்ந்து வந்துள்ளனர்.
தற்போது, சூரிய ஒளியால் நமது ரத்தத்தில் நைட்ரிக் ஆக்சைட் என்ற ரசாயனம்
உற்பத்தி ஆகி ரத்த அழுத்தத்தை குறைக்க உதவி செய்கிறது என லண்டன் எடின்பரோ
பல்கலைக்கழக ஆராச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்துசமயம் புராணங்கள்.பழங்கால விஞ்ஞானம்.கலச்சாரத்தில் உள்ளது விஞ்ஞானம் மெய்ஞானம்,அறிவு அறிவியல் அறிவோம்,
புதன், 12 அக்டோபர், 2016
பனி போல் பிணி விலக சூரிய நமஸ்காரம்
முயற்சியின்றி சோம்பலோடு இருக்கிற ஒருவருடைய நூறு ஆண்டு வாழ்க்கையை விட
ஆற்றலோடும், ஆரோக்கியத்தோடும் இருக்க முயற்சி செய்கிற ஒருவருடைய ஒரு நாளைய
வாழ்க்கை மேன்மையுடைத்து.
புத்தர்
நம் வாழ்க்கையும், ஆரோக்கியத்தோடு மேன்மையடைவது நமக்கான குறிக்கோள். ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளின் மூலம் தான், ஒரு சமுதாய அமைப்பு உருவாக முடியும். தனி மனிதனின் ஆரோக்கியமான வாழ்க்கை நெறியே, ஆரோக்கியமான சமுதாய அமைப்புக்கு வித்தாகும். ஏதாவது மாயாஜாலம், வித்தை சொல்லித் தரப் போறீங்களான்னு கேட்கிறீங்களா? ஆமாம், சித்த மந்திரங்களுடன், மந்திர வித்தைகளும் தெரிந்து கொள்ளலாம் முறையான பயிற்சிகளுடன், இடைவிடாத பின்பற்றுதல்களுடன்.
சூரிய நமஸ்காரம்...
'இது நமக்கு சரிப்பட்டு வராது... ஒரு குறிப்பிட்ட மக்கள் வெகு சிரத்தையோடு ஆச்சாரமாக செய்வது...' என்று விலகிப் போவது தவறு. முறையாக, சீராக சூரிய நமஸ்காரம் பயிற்சி செய்பவர்களை கூர்ந்து கவனித்துப் பாருங்கள். அவர்களின் நடையை கவனியுங்கள். ஒரு பிரகாசம், ஓர் உணர்வு, ஓர் உயிர்த் துடிப்பு நிச்சயமாகத் தென்படும்.
சூரிய நமஸ்கார பயிற்சி, ஓர் உன்னதமான வரப்பிரசாதம். இதை உதாசீனப்படுத்தாமல் பழகிக் கொள்வது, நம் ஆரோக்கியத்திற்கு உகந்தது. ஆனால், தற்போதைய உலகம், பழமைகளை புறம் தள்ளி வைப்பது வேதனை. 24 மணி நேரத்தில், இரண்டு நிமிடத்திலிருந்து, 20 நிமிடம் வரை, ஒதுக்குவதுக்கு கூட நம்மால் முடியாது என்று கூறினால், ஆரோக்கியம், நலம் எல்லாம் எட்டாக் கனியாகிவிடும். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லாரும் செய்யலாம். ஏனென்றால், ஒவ்வொரு மனிதனுக்கும் குறிப்பிட்ட அளவு உணவு, ஓய்வு, உடற்பயிற்சி தினமும் தேவைப்படும் அளவில் இருக்க வேண்டும் என்பது நியதி. இது விஞ்ஞானம், மெய்ஞானம் ஏற்றுக் கொண்ட உண்மை.
உணவு, ஓய்வு சரி... உடற்பயிற்சி?
'நமக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை...' என்று அலட்டாதீர்கள். குறிப்பாக பெண்கள் மனக்கலக்கம், மனதில் படபடப்பு,
நம்பிக்கையின்மை, நரம்பு தளர்ச்சி, விரக்தி போன்ற பல கோளாறுகளையும் விரட்டி சீர் செய்யும் உத்திகளை முதன்மைப்படுத்தி, இயல்பான மனம், அமைதி, ஆனந்தம், ஆரோக்கியம் தரும் எளிய, பயனுள்ள பயிற்சிகள் பற்பல உள்ளன; அதில் முதன்மையானது சூரிய நமஸ்காரம்! கண்டிப்பாக, இது ஆன்மிகம் மட்டும் சம்பந்தப்பட்டது அல்ல!
சூரியனே அனைத்து ஆற்றல்களுக்கும் மூலம். சூரியன் இல்லாவிட்டால், இப்பூவுலகில் வாழ்க்கையே இருக்காது. ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலேயே, இந்தியர்கள் சூரியனிடமிருந்து ஆற்றல் பெறுவதை, ஒரு விஞ்ஞானமாகவே வளர்த்து வந்துள்ளனர். சூரிய நமஸ்காரம், நிமிர்ந்து, குனிந்து, வளைந்து, படுத்து என, எல்லா நிலைகளிலும் செய்யலாம். மனிதன், செயல்படும்போது மட்டுமே வாழ்கிறான்.
'வைத்தியனுக்கு வேலையில்லை'
காலை, மாலை இரண்டு நேரங்களிலும் செய்வது, உடலுக்கும், மனதுக்கும், உயிருக்கும் நலமளிக்கும். காலை ஆதவனை வரவேற்பவனிடம், ஆரோக்கியம் அள்ள அள்ள குறையாத பொக்கிஷமாக இருக்கும்; இது உறுதி. 'சூரியன் நுழையும் இடத்தில், வைத்தியனுக்கு வேலையில்லை' என, வல்லுனர்கள் சொல்வர்.
முதுமையிலும், இளமையின் துளிர் காண, இப்பயிற்சிகளை எந்த வயதிலும் அருமையாக செய்யலாம். ஒரு நமஸ்காரத்தில்,
12 நிலைகள் உள்ளன. ஆரம்பத்தில், இந்த பயிற்சியை மேற்கொள்வதில் சில சிரமங்கள் இருக்கலாம்; ஒரு வார பயிற்சியில்
சரியாகிவிடும். ஓர் ஆண்டு காலத்தில், உடம்பு துவண்டு இளமை பெறும்.
மோட்டார் பேட்டரியை சார்ஜ் செய்வது போன்று, பிரபஞ்சத்தில் உள்ள பிராண சக்தியை, இதன் மூலம் உடலில் நிரப்பிக் கொள்ளலாம்; 15 நிமிடங்கள் தான் ஆகும். பிராண சக்தியை, போதுமான அளவுக்கு பெருக்கிக் கொள்வதற்காக, இது அதிகம் என, யாரும் நினைக்க மாட்டீர்கள் தானே!
காலையில் சூடான பானங்களை தவிர்த்து, இரண்டு டம்ளர் தண்ணீரை குடித்தாலே, நாம் ஆரோக்கியமாய் வாழலாம். முதலில் 1, 2, 3 என, ஆரம்பித்து, 10, 12 லிருந்து, 20 வரை உயர்த்திக் கொள்ளலாம். இதன் பலன்கள் பற்பல...
தினமும் செய்வதால், ஜீரண மண்டலம் ஆற்றல் பெருகி, செரிமானம் எளிதாகும். வயிற்றுக்குள் இருக்கும், அங்க அவயங்கள், தத்தம் இடத்தில் இருந்து இசைவாகப் பணிபுரியும்.
நுரையீரல்களில், காற்றோட்டம் தாராளமாகிறது. கரிக்காற்றையும், பிற நச்சுப் பொருள்களையும், மூச்சு மண்டலத்திலிருந்து வெளியேற்றுவதன் மூலம், சூரிய நமஸ்காரம் உடலுக்கு பெரும் நன்மை விளைவிக்கிறது.
சீரான ரத்த ஓட்டம், இதய துடிப்பு, கை, கால்களுக்கு சூடு, நரம்பு மண்டலத்தை விழிப்புடன் வைத்திருப்பது, வியர்வையை வெளியேற்றுவது, நம் எல்லா உடல் உறுப்புகளும், இந்த பயிற்சியால் பலன் பெறும். கொழுப்பால் உண்டாகியிருக்கும் மடிப்புகள் மறையும். தோல், நுரையீரல், குடல், சிறுநீரகம் முதலிய பகுதிகள் வழியே, சரியாக கழிவுகள் வெளியேறுவதால், உடலில் துர்நாற்றம் ஏற்படுவதில்லை.
இளமை, நலம், அழகு மூன்றும் வேண்டுமானால், இதோ... மார்கழி மாதத்தில் ஆரம்பிப்போம் சூரிய நமஸ்காரத்தை; இனி காலைப் பொழுது சோம்பலைத் தவிர்த்து, இந்த சுலப பயிற்சியால் புத்துணர்வு பெற, சங்கல்பம் எடுப்போம்!
சூரிய நமஸ்காரம் யாரெல்லாம் செய்யலாம்? எங்கு, எப்போது, எப்படி செய்ய ஆரம்பிப்பது? சூரியனை பார்த்துக் கொண்டேதான் செய்யணுமா?
என்ன நாயகியரே... பல கேள்விகள், ஒன்றன் பின் ஒன்றாக நடனமாடுகிறதா? எவ்வளவோ விஷயங்கள் சொன்னோம். அதையும் சொல்லமாட்டோமா?
அடுத்தவாரம் கண்டிப்பாக...

வெள்ளி, 30 செப்டம்பர், 2016
சாபம், பாவம் நீக்கும் திருப்புவனம் பூவனநாதர்!
முன்னோர் சாபத்தாலும், அவர்கள் செய்த
பாவத்தாலும் வழிவழியாக அவதிப்படும் குடும்பங்கள் பல இருக்கின்றன. சில
குடும்பங்களில், தொடர்ச்சியாக பெண்கள் வாழாமல் போவார்கள். சிலருக்கு செல்வ
அபிவிருத்தி இருக்காது. சில வீடுகளில் எதிர்பாராமல் யாருக்கேனும் அகால
மரணம் ஏற்படும். இப்படி அவதிப்படுபவர்கள் குடும்பத்துடன் வந்து வழிபட
வேண்டிய தலம், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் திருப் பூவனநாதர் கோயில்.
இங்கு நெய் விளக்கேற்றி வழிபட்டால், சாபத்தையும் பாவத்தையும் நீக்கி, குலம்
தழைக்கும்.
தல வரலாறு: திருப்புவனத்தில் வசித்த பொன்னனையாள் என்ற நடன மாது தனது கலையால் ஈட்டிய செல்வத்தை, சிவனடியார்களுக்கு அன்னதானம் செய்வதில் செலவழித்தாள். சிவபக்தையான அவளுக்கு அவ்வூரில் இருந்த பூவனநாதருக்கு சொக்கத்தங்கத்தில் சிலை வடிக்க ஆசை இருந்தது. இவளது ஆசையை நிறைவேற்ற சிவனே சித்தராக மாறி இவள் வீட்டிற்கு சென்று வீட்டிலுள்ள செம்பு, ஈயம், பித்தளை பாத்திரங்களை இரவில் நெருப்பிலிட்டால் பொன்னாக மாறும் என கூறினார். பொன்னனையாளும் அவ்வாறே செய்ய அவை பொன்னாக மாறின. அந்த பொன்னைக் கொண்டு சிலையை உருவாக்கினாள். சிலையின் அழகில் சொக்கி, அதன் கன்னத்தை கிள்ளி முத்தமிட்டாள். அவள் பதித்த நகக்குறி இன்றும் இங்குள்ள உற்சவரிடம் காணப்படுகிறது. இங்கு அம்பாள் சவுந்தரநாயகியுடன் சுவாமி அருள்பாலிக்கிறார். இவளுக்கு மின்னணையாள் என்ற பெயரும் உண்டு. மதுரை மீனாட்சியைப் போல சுவாமிக்கு வலப்பக்கத்தில் அம்மன் இருப்பதால், அவளுக்கு இங்கு முக்கியத்துவம்.
தல வரலாறு: தர்மயக்ஞன் என்பவன் தன் தந்தையின் அஸ்தியை காசியில் இருந்து ராமேஸ்வரம் கொண்டு சென்றான். அவனுடன் உறவினன் ஒருவனும் சென்றான். வரும் வழியில், இத்தலத்தில் சற்று ஓய்வு எடுத்தனர். சற்று நேரம் கழித்து கிளம்பிய போது, உடன் வந்த உறவினன் கலசத்தைத் திறந்து பார்த்தான். உள்ளிருந்த அஸ்தி புஷ்பமாக (பூ) மாறியிருந்தது. தான் பார்த்த இந்த காட்சியை தர்மயக்ஞனிடம் அப்போது அவன் கூறவில்லை. ராமேஸ்வரம் சென்று கடலில் அஸ்தியை கரைக்க கலசத்தை திறந்த போது பூக்கள் அஸ்தியாக மாறியிருந்தன. அதிர்ச்சியடைந்த உறவினன், தான் பார்த்த காட்சியை தர்மயக்ஞனிடம் சொல்ல, அஸ்தியை அங்கே கரைக்காமல், மறுபடியும் திருப்புவனத்திற்கு வந்தனர். அங்கு வந்து பார்த்த போது கலசத்தில் இருந்த அஸ்தி புஷ்பமாக மாறி இருந்தது.
காசியிலும், ராமேஸ்வரத்திலும் அஸ்தியாக இருந்தது இங்கு புஷ்பமாக இருந்ததால் காசி நகரத்தை விட 16 மடங்கு புண்ணியம் தரும் இடமாக இத்தலம் போற்றப்படுகிறது. இதை ‘காசிக்கு வீசம் அதிகம்’ எனும் சமயப்பெரியோர் கூற்றிலிருந்து அறியலாம். காசிக்கு செல்ல முடியாதவர் இங்குள்ள வைகையில் அஸ்தியை கரைத்து மோட்ச தீபம் போடும் வழக்கம் இன்றளவும் நடந்து வருகிறது. இங்கு அஸ்தி கரைத்தாலோ, பிதுர்தோஷ வழிபாடுகள், தர்ப்பணம் செய்தாலோ முன்னோர் செய்த பாவம் நீங்கி அவர்களும் நற்கதியடைவதுடன், அந்தக் குடும்பங்களும் நன்றாக இருக்கும் என்பது நம்பிக்கை.
வழி விட்ட நந்தி: இத்தல இறைவனை சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் நால்வரும் பாடியுள்ளனர். சம்பந்தர், திருப்புவனத்திற்கு வந்த போது ஆற்று மணல் சிவலிங்கமாக காட்சியளித்தது. அதன் மீது கால் வைக்க அஞ்சிய சம்பந்தர், வைகையாற்றின் மறுகரையில் நின்றபடியே சிவனை பாடினார். அப்போது நந்தி லிங்கத்தை மறைத்திருந்தது. சம்பந்தர் சிவனை வேண்ட, சம்பந்தருக்காக நந்தியை சற்று விலகி தன்னை மறைக்காமல் இருக்கும்படி சிவன் கேட்டு கொண்டார். அதன்படி, இங்கு நந்தி சற்று விலகி இருப்பது சிறப்பு.
சிறப்பம்சம்: ஐந்து நிலை கோபுரம் கொண்ட இங்கு, சுவாமி சுயம்புலிங்கமாய், ருத்ராட்ச மேனியாய் காட்சியளிக்கிறார். லிங்கத்தில் திரிசூல முத்திரையும் உள்ளது. இங்கு 5 தீர்த்தங்கள் உள்ளன. இதில், வைகையிலுள்ள மணி கர்ணிகை தீர்த்தம் மிகவும் சிறப்பு வாய்ந்தது. இங்கு ஸ்நானம் செய்தபடியால் அகஸ்திய முனிவர் கடல் நீரை பருகும் சக்தி பெற்றார். நளன், பிரம்மா, விஷ்ணு, சூரியன், மகாலட்சுமி, அகத்தியர், கவுதம முனிவர், கோரக்கசித்தர் வந்து இறைவனை பூஜித்து நற்பலன் பெற்ற தலம் என்று தலபுராணம் கூறுகிறது.
திருவிழா: வைகாசி விசாகம், ஆடி முளைக்கொட்டு உற்சவம், புரட்டாசி நவராத்திரி, ஐப்பசி கோலாட்ட திருவிழா, கார்த்திகை தீபம், மார்கழி ஆருத்ரா தரிசனம், மாசி சிவராத்திரி, பங்குனி பிரம்மோற்சவம்.
திறக்கும் நேரம் : காலை 6- – 11 மணி,
மாலை 4- -– இரவு 8.
இருப்பிடம் : மதுரையிலிருந்து ராமேஸ்வரம் செல்லும் ரோட்டில் 18 கி.மீ.,

ஞாயிற்றுத் தொகுதி
ஒன்றுக்கு
மேற்பட்ட இடைத் தொடர்புகளையுடைய அம்சங்களுடன் சேர்ந்து இயங்குபவை தொகுதி
(ஒருங்கியம்) எனப்படுகின்றது. தொகுதி என்பது பருப்பொருட்களால் ஆனது
மட்டுமல்லாமல், கருத்துப்பொருளாகவும், நுண்பொருட்களாகவும் கூட இருக்கலாம். தெகுதியானது தனக்கென ஓர் உள்கட்டமைப்பு, உறுப்புகள், தொடர்புகள், இயக்கப்பாடு. நடத்தை இயங்குமுறை என்பவற்றைக் கொண்டிருப்பதுடன், தன்னைச் சூழ்ந்துள்ள சூழலுடன் ஏதேனும் வகையில் பரிமாற்றத்தை (கொடுக்கல் - வாங்கல்) கொண்டனவாகவும் காணப்படும்.
தொகுதியானது முழுமைத்தொகுதி, உபதொகுதி எனபிரதானமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. சிக்கல் நிறைந்து இருப்பவை முழுமைத்தொகுதி என்றும், சிக்ல்
தன்மை கொண்ட ஒரு தொகுதியின் சிக்கல் தன்மையை இலகுவாக்குவதற்கு அதனை
சிறுசிறு தொகுதிகளாக்குவது உப தொகுதி எனவும் அழைக்கப்படுகின்றன. உதாரணமாக, ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துமாணவர்களையும் ஒன்றுசேர்த்து 'பல்கலைக்கழக மாணவர்கள்' என அழைப்பது முழுமைத்தொகுதி எனவும், பல்கலைக்கழக மாணவர்களை முதலாம் வருட மாணவர்கள், இரண்டாம் வருட மாணவர்கள், மூன்றாம் வருட மாணவர்கள் என பிரிப்பது உபதொகுதிகளெனவும் கொள்ளலாம்.
தொகுதியின் வகை (Type of System)
சக்தி மற்றும் பதார்த்தங்களைப் பரிமாரிக்கொள்கின்ற முறைகளுக்கமைவாக தொகுதியானது பிரதானமான மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது.
1. தனித்த தொகுதி (Isolate System)
2. மூடிய தொகுதி (Closed System)
3. திறந்த தொகுதி (Open System)
• தனித்த தொகுதி – தனது
செயற்பாட்டிற்குரிய சக்தியையும் பதார்த்தங்களையும் தமது தொகுதியினுள்ளே
உற்பத்தி செய்து கொள்ளும் தொகுதி தனித்த தொகுதி ஆகும். தனித்த தொகுதிக்குள்
ஏதாவது பொருட்களோ, பதார்த்தமோ, சக்தியோ, கதிர்வீச்சோ
உடசெல்லவோ அல்லது வெளியேறவோ முடியாதிருக்கும். தனித்ததொகுதிக்கு
எடுத்துக்காட்டாக ஞாயிற்றுத் தொகுதியினைக் குறிப்பிடலாம்.
• மூடிய தொகுதி – தனது
செயற்பாட்டிற்குத் தேவையான பதார்த்தங்களைப் பெறாது சக்தியை மட்டும் பெற்று
செயற்பட்டு மீளவும் சக்தியை வெளியிவிடுமாயின் அது மூடியதொகுதி ஆகும்.
மூடிய தொகுதிக்குள் சகத்தி மாத்திரம் உள்வரவும், வெளிச்செல்லவும் முடியும். ஆனால் பொருட்கள் பதாhததங்கள் உட்செல்லவோ வெளிச்செல்லவோ முடியாது. மூடிய தொகுதிக்கு எடுத்துக்காட்டாக புவியினுடைய வளிமண்டலத் தொகுதியினைக் குறிப்பிடலாம்.
• திறந்த தொகுதி – தனது செயற்பாட்டிற்குரிய சக்தியையும் பதார்த்தங்களையும் வேறு தொகுதியிலிருந்து பெற்றுச் செயற்பட்டு அச்சக்தியையும் பதார்த்தங்களையும் வெளிப்படுத்தும் தொகுதி திறந்த தொகுதி எனப்படும். திறந்த தொகுதிக்கு எடுத்துக்காட்டாக ஆற்றுத்தொகுதி, உயிரினத்தொகுதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.
ஞாயிற்றுத் தொகுதி (Solar System)
சூரியனையும் அதனைச் சுற்றியுள்ள புதன் முதல் நெப்ரியூன் வரையான 08 கோள்கள், 43 துணைக்கோள்கள் , சிறுகோள்கள்
யாவும் சேர்ந்த கூட்டமே ஞாயிற்றுத்தொகுதி ஆகும். ஞாயிற்றுத் தொகுதியில்
உள்ள கோள்களுள் பெரிய நட்சத்திரமான சூரியன் கோள்களைத் தன்னிடம் கவர்கின்ற
ஈர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது. கோளவடிவிலான சூரியன் 1.4 மில்லியன் கிலோமீற்றர் விட்டத்தையும், புவியில் இருந்து 149.65 மில்லியன் கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. சூரினது மேற்பரப்பு வெப்பநிலை 6000oC ஆகக் காணப்படுவதுடன், ஐதரசன்(H), ஹீலியம்(He) ஆகிய வாயுக்களையும் கொண்டுள்ளது.

ஞாயிற்றுத் தொகுதியில் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒழுங்குமுறையாக அமைந்துள்ளன. ஞாயற்றுத்தொகுதியில் உள்ள கோள்களை அகக்கோள், புறக்கோள் என இரண்டாகப் பாகுபடுத்துகின்றனர். புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய முதல் 4 கோள்களும் அகக்கோள் எனவும், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ் ஆகிய இறுதி 4 கோள்களும் புறக்கோள்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களில் மிகப்பெரிய கோளாக வியாழனும், மிகச்சிறய கோளாக புதனும் காணப்படுகின்றது. அதேவேளை வெப்பம் கூடிய கோளாக வெள்ளியும், நீலக்கோளாக புவியும், சிவப்புக்கோளாக செவ்வாயும் காணப்படுகின்றது. ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்கள் தம்மைத் தாமே சுற்றிக்கொண்டு, நீள்வட்டப்பாதையில்
சூரியனையும் சுற்றிவருகின்றன. வெள்ளி தவிர்ந்த ஏனைய கோள்கள் யாவும்
சுழற்சியின்போது மேற்கிலிருந்து கிழக்குநோக்கி சுழற்சியுற, வெள்ளிகோள் மாத்திரம் கிழக்கிலிருந்து மேற்குநோக்கி சுழற்சியுறுகின்றது.
அட்டவணை: ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்கள்
|
கோள்கள்
|
விட்டம் (KM)
|
சூரியனிலிருந்தான தூரம் (Million KM)
|
சுழற்சிக் காலம்
|
சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம்
|
உப கோள்கள்
|
|
புதன்
|
4879.4
|
57.9
|
58.65 புவிநாட்கள்
|
87.97 புவிநாட்கள்
|
0
|
|
வெள்ளி
|
12103.6
|
108.2
|
243 புவிநாட்கள்
|
225.7 புவிமணித்தியாலயம்
|
0
|
|
புவி
|
1276.3
|
149.6
|
1 புவிநாட்கள்
|
365.25 புவிநாட்கள்
|
1
|
|
செவ்வாய்
|
6794.0
|
227.9
|
1.02 புவிநாட்கள்
|
1.88 வருடம்
|
2
|
|
வியாழன்
|
142984.0
|
778.4
|
9.9 புவிமணித்தியாலயம்
|
11.86 புவிவருடம்
|
63
|
|
சனி
|
120536.0
|
1426.7
|
10.2 புவிமணித்தியாலயம்
|
29.46 புவிவருடம்
|
50
|
|
யுரேனஸ்
|
51118.0
|
2871.0
|
17.9 புவிமணித்தியாலயம்
|
83.75 புவிவருடம்
|
27
|
|
நெப்டியுன்
|
55528.0
|
4498.0
|
16.11 புவிமணித்தியாலயம்
|
164.79 புவிவருடம்
|
13
|
ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய நீர், வழி என்பன சிறப்பாக காணப்படுகின்ற ஒரேயொரு கோள் புவி ஆகும். புவியானது தனது அச்சில் 23 ½ பாகை
சரிவாக உள்ளது. புவியைச் சுற்றிப் பயணம் செய்கின்ற ஒரேயொரு உபகொள்
சந்திரன் ஆகும். புவி தனது அச்சில் தன்னைத்தானே சுற்றி வருவது புவிச்
சுழற்சி எனப்படுகின்றது. இது மேற்கில் இருந்து கிழக்குத் திசையாக சுற்றி
வருகின்றது. புவியானது தன்னைத்தானே சுற்றுவதனால் சூரியனின் ஒளி கிடைக்கும்
பகுதி பகலாகவும், ஒதுக்குப் பகுதி இரவாகவும் விளங்குகின்றது.
புவி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டுவருவதனால் கோடை, மாரி எனும் பருவகாலங்கள் ஏற்படுகின்றன. ஜுன் 21 இல் சூரியன் கடகக்கோட்டுக்கு (23 ½ பாகை வடக்கு) உச்சம் கொடுக்கின்றபோது வடஅரைக்கோள நாடுகள் அதிக வெப்பத்தினைப் பெற்று கோடைப்பருவமும், தென்னரைக்கோளத்தில் குறைவான வெப்பநிலை நிலவுவதால் மாரிப்பருவமும் நிலவுகின்றது. டிசம்பர் 21 இல் சூரியன் மகரக்கோட்டுக்கு (23 ½ பாகை தெற்கு) உச்சம்கொடுக்கின்றபோது, தென்னரைக்கோள நாடுகள் அதிக வெப்பத்தினைப் பெற்று கோடை பருவத்தையும், வடஅரைக்கோளத்தில் மாரிப்பருவத்தையும் அனுபவிக்கின்றன.
மார்ச் 21 இல் சூரியன் மத்தியகோட்டிற்கு உச்சம் கொடுக்கும்போது தென்னரைக்கோளத்தில் இலையுதிர் பருவமும், வட அரைக்கோளத்தில் இளவேனிற் பருவமும் நிலவுகின்றது. செப்டம்பர் 23 இல் சூரியன் மத்திய கோட்டில் உச்சம் கொடுக்கும்போது வடஅரைக்கோளத்தில் இலையுதிர்பருவமும், தென்னரைக்கோளத்தில் இளவேனிற் பருவமும் நிலவுகின்றது.
சூரியன் கடகக்கோட்டிற்கு உச்சம் கொடுக்கின்றபோது, ஆக்டிக்வட்டம் 24 மணித்தியாலம் பகலாகவும், அந்தாட்டிக் வட்டம் 24 மணித்தியாலம் இரவாகவும் இருக்கும். சூரியன் மகரக்கோட்டிற்கு உச்சம் கொடுக்கின்றபோது, அநடதாட்டிக் வட்டம் 24 மணித்தியாலமும் பகலாகவும், ஆட்டிக் வட்டம் 24 மணித்தியாலமும் இரவாகவும் இருக்கும்.
சூரியன் மத்திய கோட்டிற்கு உச்சம் கொடுக்கின்ற நாட்களான மாச் - 21, செப்டம்பர் -23 ஆகிய தினங்களில் சமஇராக்காலங்கள் நிலவப்பெறும்.
சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவில் ஏரிகள் இருப்பது கண்டுபிடிப்பு: நாசா-இஎஸ்ஏ விஞ்ஞானிகள் தகவல்
சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான டைட்டான்.
சனி கிரகத்தின் மிகப்பெரிய நிலவான ‘டைட்டானில்’ ஏரிகள் இருப்பது தெரிய
வந்துள்ளது. நாசா - ஐரோப்பிய விண்வெளி கழகம் நடத்தி வரும் ஆய்வில்
இத்தகவல் தெரியவந்துள்ளது.
பூமியை தவிர வேறு கிரகங்களில் உயிர்கள் உள்ள னவா, உயிர் வாழ சாத்திய
கூறுகள் உள்ளனவா, வேற்றுகிரக மனிதர்கள் உள்ளனரா என்பன போன்ற தகவல்களை
உறுதிப்படுத்த பல நாடுகள் தீவிர ஆராய்ச்சிகளை தொடர்ந்து நடத்தி வருகின்றன.
சனி கிரகத்தை ஆய்வு செய்ய அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா,
‘கேசினி’ என்ற விண்கலத்தை அனுப்பி உள்ளது. அது சனி கிரகத்தை சுற்றி வந்து
தகவல்களை அனுப்பி வருகிறது.
பூமிக்கு நிலவு உள்ளதுபோல் சனி கிரகத்துக்கும் பல நிலவுகள் உள்ளன.
அவற்றில் மிகப் பெரியது ‘டைட்டான்’ நிலவு. இந்த ‘டைட்டான்’ நிலவில்
பூமியில் உள்ளது போலவே நில அமைப்பு, கடல், ஏரிகள் இருந்துள்ளது தெரிய
வந்துள்ளது. நாசா - ஐரோப்பிய விண்வெளி கழகம் (இஎஸ்ஏ) ஆகியவை இணைந்து
டைட்டானுக்கு கேசினி -ஹூஜென் என்ற ரோபோவை தரையிறக்கி ஆய்வு செய்து
வருகின்றன. அந்த ரோபோ அனுப்பியுள்ள பல தகவல்களில், டைட்டான் நிலவில்
ஏரிகள் இருந்தது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து இஎஸ்ஏ.வின் ஆராய்ச்சியாளர் தாமஸ் கார்ஜெட் கூறுகையில்,
‘‘டைட்டான் நிலவில் தண்ணீரால் நில அரிப்பு ஏற்படுவதையும் பூமியில் நில
அரிப்பு ஏற்படுவதையும் ஒப்பிட்டு பார்த்து வருகிறோம். இதில் பூமியைவிட
டைட்டானில் 30 மடங்கு மெதுவாக தண்ணீரில் கரைதல் நடைபெறுகிறது. டைட்டானில்
ஓராண்டு என்பது மிக நீண்ட காலமாக இருப்பதால் அங்கு கரைதல் மெதுவாக
நடைபெறுகிறது. மேலும், சுண்ணாம்புக்கல், ஜிப்ஸம் ஆகிய தண்ணீரில் கரைய கூடிய
பாறைகள் மழை மற்றும் தண்ணீரால் அரிக்கப்பட்டதற்கான ஆதாரங்கள் உள்ளன’’
என்றார்.
கேசினி திட்ட விஞ்ஞானி நிகோலஸ் கூறுகையில், ‘‘பூமியின் நில அமைப்பை,
டைட்டான் நிலவின் நில அமைப்புடன் ஒப்பிட்டு ஆராய்ச்சி மேற்கொண்டு
வருகிறோம். இரண்டிலும் நில அமைப்பு உருவான விதத்தில் சில ஒற்றுமைகள்
காணப்படுகின்றன. தொடர்ந்து ஆராய்ச்சி நடக்கிறது’’ என்றார்.
காமத்தைக் கட்டுப் படுத்தத்தான் வேண்டுமா?
காமம் என்பது எல்லா உயிரினங்களின் இயல்பான
ஒரு உணர்வு ஆகும். இயற்கையான உணர்வு என்று கூட சொல்லலாம். பருவ வயது
வந்தவுடன் நம் உடலில் உள்ள சிலபல ஹார்மோன்கள் 'ஓவர்டைம்' போட்டு வேலை
செய்யும்போது நாம் தடுமாறித்தான் போகின்றோம். மன்மதலீலையை வென்றார் உண்டோ?
சில பெரிய மனிதர்கள் குறிப்பாக ஆன்மிகத்தில் உள்ளவர்கள் காமத்தை அடக்க
வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். காமத்தைக் கட்டுப் படுத்தத்தான்
வேண்டுமா? அது நிஜமாகவே முடியுமா? மேலே படியுங்கள்.....
சில ஆன்மிக குருமார்கள் காமத்தைக் கட்டுபடுத்த வேண்டும் என்று சொல்லுகின்றார்கள். விந்தை அடக்கி மேல் நோக்கி செலுத்தினால் நன்மைகள் கோடி உண்டு என்று சொல்லுகின்றார்கள். விஞ்ஞானத்தில் இது சாத்தியமா என்று தெரியவில்லை. காம உணர்ச்சி தவறானது என்றால் இயற்கை அந்த உணர்வை அத்தனை ஜீவராசிகளுக்கும் கொடுத்திருக்குமா என்கின்ற கேள்வி எழுகின்றது. இயற்கையான எதுவும் தவறாக இருக்க முடியாது என்பது விதி. அப்படி பார்க்கின்ற போது காமம் தவறில்லை என்றே தோன்றுகிறது.
ஆனால் அதற்காக 24 மணி நேரமும் அந்த சிந்தனையிலேயே இருத்தலும் தவறு தான். காமத்தை அடக்கக் கூடாது என்பது பொது விதி. ஆனால் கல்யாணம் வரை நாம் காத்து இருக்கத் தான் வேண்டும். வாழ்க்கைத் துணையுடன் காமக் களியாட்டங்களில் முழுமையாக ஈடு பட்டு இன்பத்தை துய்க்கலாமே?
உடலின் எந்த தேவைகளையுமே நாம் அடக்கக் கூடாது என்பதே நிஜம். காமமும் அப்படியே. ஆனால் சில நேரங்களில் நமக்குக் கட்டுப் பாடு நிச்சயம் தேவைப் படுகின்றது என்பது உண்மை தான். அந்த கட்டுப் பாடு தான் ஒரு வேளை நம்மை மிருகங்களிடமிருந்து வித்தியாசப் படுத்திக் காட்டுகின்றதோ?
பொதுவாக காமத்தைக் கட்டுப் படுத்தக் கூடாது என்றே நினைக்கின்றேன். ஆனால் அதே சமயம் இடம் பொருள் ஏவல் பார்த்தது அளவுடன் வைத்துக் கொள்ளுவது சரியாக இருக்கும் என்று சொல்லி முடிக்கின்றேன்.
வாழ்க வளமுடன்!
காதலுக்காக வாழ்க்கையைத் தொலைத்தவர்கள் எத்தனை பேர்?
சுக்கிரன் ஆண்களையும் பெண்களையும் படுத்தும் பாடு

பாபக் கிரகங்கள் எவை? சுபக் கிரகங்கள் எவை?
மனிதர்களில் நல்லவர்கள் மற்றும்
பாபிகள் இருப்பது போல் கிரகங்களிலும் சுபக் கிரகங்கள் மற்றும் பாப
கிரகங்கள் என்று இருக்கின்றன என்று இந்திய ஜோதிடம் கூறுகிறது. பாப
கிரகங்கள் எவை? சுபக் கிரகங்கள் எவை?மேலே படியுங்கள்....
குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர் பிறை சந்திரன் ஆகியோர் சுபக் கிரகங்கள் ஆவர். அவற்றிலும் குரு முழு சுபர். சுக்கிரனோ முக்கால் சுபர். அதாவது அவருக்கு கொஞ்சம் தீய குணங்களும் உண்டு என்று ஆகிறது. புதன் பாதி சுபர், பாதி அசுபர். அதாவது புதன் நல்ல குணங்களையும் , தீய குணங்களையும் பெற்றவர். இன்னும் சொல்லப் போனால் புதன் சுபருடன் சேர்ந்தால் சுபராவர். பாபியுடன் சேர்ந்தால் பாபியாவார்.
சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது, மற்றும் தேய் பிறை சந்திரன் ஆகியோர் பாபக் கிரகங்கள் என்று ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன.
சுபக் கிரகங்கள் எல்லோரும் எப்பொழுதுமே நல்லதையே செய்வார்களா? தீயக் கிரகங்கள் எப்பொழுதுமே தீமைகளையே செய்வார்களா? அப்படி அல்ல. சுபக் கிரகங்கள் கெடுதலும் செய்யலாம். பாபக் கிரகங்கள் நல்லதும் செய்யலாம். எப்படி என்று கேட்கிறீர்களா? உங்கள் லக்னத்தைப் பொருத்துதான் ஒரு சுபக் கிரகம் நல்லது செய்ய முடியுமா அல்லது தீமை செய்யமா என்று கணிக்க இயலும். அதே போல் ஒரு தீயக்கிரகம் உங்களுக்கு நல்லது செய்ய முடியுமா என்றும் உங்கள் லக்னத்தை வைத்துத் தெரிந்து கொள்ளலாம்.
ஒரு லக்னத்திற்கு நல்ல வீடுகளுக்கு அதிபதியாக தீய கிரகங்கள் வந்தால் அவை நல்ல பலன்களையேத் தருவார்கள். அதே சமயம் ஒரு லக்னத்திற்கு தீய வீடுகளுக்கு அதிபதியாக சுபர்கள் வந்தால் தீய பலன்களையே தருவர்.
ரிஷப லக்னத்திற்கு சனி சுப கிரகமாவார். சனி, ரிஷப, மற்றும் துலாம் லக்னக்காரர்களுக்கு ராஜ யோக கிரகம் ஆவார். அவர் அந்த லக்னக்காரர்களுக்கு நல்லதையே செய்வார். அதே சமயம் முழு சுபரான குரு ரிஷப லக்னக்கார்களுக்குத் தீமைகளையே செய்வார்என்பது பொது விதி ஆகும்.
ஆனால் சுபாவ சுபக் கிரகங்கள் தீய வீடுகளுக்கு அதிபதியானாலும் அதிக தீய பலன்களைத் தரமாட்டார்கள். சுபாவ பாபக் கிரகங்கள் நல்ல வீடுகளுக்கு அதிபதியானாலும் அதீதமான நல்ல பலன்களைத் தரமாட்டார்கள் என்பது தான் நிஜம். சுபர் சுபர் தான். பாபி பாபி தான்.
அதிகக் கெடுபலன்களைக் கொடுக்க கூடியவர் கேது. அதிக நற்பலன்களைத் தரக் கூடியவர் குரு ஆகும்.

கார்த்திகைப் பண்டிகையன்று என்ன விசேஷம்?
கார்த்திகைப் பண்டிகை தமிழகத்தில் கொண்டாடப்படுகின்ற முக்கிய பண்டிகைகளில் ஒன்று. எந்த ஆண்டாக இருந்தாலும் சரி, கார்த்திகை மாதத்தில் பௌர்ணமியையொட்டித் தான் இப்பண்டிகை வரும். அனேகமாக அன்றைய தினம் கார்த்திகை நட்சத்திரமாக இருக்கும். நாம் இங்கு கவனிக்கப் போவது மத ரீதியிலான விஷயங்கள் அல்ல. இது வானவியல் (Astronomy) பற்றியது. அதாவது கார்த்திகைப் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு எவ்விதம் வானவியல் அம்சங்கள் காரணமாக உள்ளன என்பதை விளக்குவது.
பூமியைச் சந்திரன் சுற்றி வருவதை நாம் அறிவோம். பௌர்ணமியன்று சூரியன், பூமி, சந்திரன் ஆகிய மூன்றும் இதே வரிசையில் நேர்கோட்டில் இருப்பதாகச் சொல்லலாம். அந்த நேர்கோட்டை நாம் நீட்டிக் கொண்டே போனால் கோடானு கோடி கிலோ மீட்டருக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கின்ற இடத்துக்குப் போய்ச் சேரும். அதாவது சூரியன் - பூமி - சந்திரன் - கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ஆகிய நான்கும் கிட்டத்தட்ட ஒரே வரிசையில் இருக்கும்.
தமிழகத்தின் பல பண்டிகைகள் இவ்விதம் வானவியல் அடிப்படையிலானவை. பண்டைக்காலத்தில் தமிழர்கள் வானவியலில் வல்லுநர்களாக இருந்ததை இவை காட்டுவதாகச் சொல்லலாம். சங்க இலக்கியங்களிலும் வானவியல் பற்றிய குறிப்புகள் உள்ளன.
வானவியல் நிபுணர்கள் வானத்தை 12 ராசிகளாகப் பிரித்துள்ளனர். அவற்றில் ரிஷப ராசியும் ஒன்று. இந்த ரிஷப ராசியில் அடை போன்று பல நட்சத்திரங்கள் காணப்படும். இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு நமது முன்னோர்கள் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் என்று பெயர் வைத்தனர்.
சந்திரன் ஓயாது பூமியைச் சுற்றி வருகின்றது. ஆண்டில் சுமார் 12 அல்லது 13 பௌர்ணமிகள் வரும். ஏற்கெனவே குறிப்பிட்டபடி கார்த்திகை மாதப் பௌர்ணமியில் மட்டுமே சூரியன், பூமி,பௌர்ணமி சந்திரன், கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் ( ரிஷப ராசி) ஆகிய நான்கும் ஒரே நேர் கோட்டில் இருக்கும். மற்ற மாதங்களில் வருகின்ற பௌர்ணமிகளில் சந்திரனுக்குப் பின்னால் ரிஷப ராசிக்குப் பதில் வேறு ராசி அமைந்திருக்கும்.
வேடிக்கை என்னவென்றால், கார்த்திகைப் பண்டிகையன்று கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தை வானில் காண இயலாது. வானில் சந்திரனுக்கு அருகில் கார்த்திகை நட்சத்திரக் கூட்டம் இருக்கும் என்பதால் பௌர்ணமி நிலவின் பிரசாகத்தின் காரணமாக அது புலப்படாது. ஆனால் ஜனவரி மாதத்தில் கிழக்கு வானில் இரவு 8 மணிக்கு மேல் காண முடியும். பின்னர் ஏப்ரல்-மே மாதங்களில் மேற்கு வானில் சூரிய அஸ்தமனத்துக்குப் பிறகு கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தைக் காண முடியும்.
இந்த நட்சத்திரக் கூட்டத்தில் உள்ள Alcyone எனப்படும் நட்சத்திரமே கார்த்திகை நட்சத்திரமாகக் அழைக்கப்படுகிறது. வானவியலில் இந்த நட்சத்திரம் Eta Tauri என்று அழைக்கப்படுகிறது. இது சூரியனை விட 1000 மடங்கு பிரகாசம் கொண்டது. வட மொழியில் கார்த்திகை நட்சத்திரம் க்ருத்திகா எனப்படுகிறது. இந்தியாவில் ஆண்களில் பலர் கார்த்திக், கார்த்திகேயன் என்று தங்கள் குழந்தைகளுக்குப் பெயர் வைக்கிறார்கள். பெண்களாக இருந்தால் க்ருத்திகா என்று பெயரிடுகின்றனர்
![]() |
| படத்தில் இடமிருந்து இரண்டாவதாக உள்ளது தான் கார்த்திகை (Alcyone) நட்சத்திரம். படம்: courtesy NASA/ESA/AURA/Caltech |
ஜப்பானிய மொழியில் இந்த நட்சத்திரக் கூட்டதுக்கு சுபாரு என்று பெயர். ஜப்பானிய கார் நிறுவனம் ஒன்று தங்கள் நிறுவனத்துக்கு சுபாரு என்று வைத்ததுடன் நில்லாமல் அதன் லோகோவில் ஆறு நட்சத்திரக் குறிகளைப் போட்டுக்கொண்டுள்ளது. அரபு மொழியில் கார்த்திகை நட்சத்திரத்துக்கு அல் துராயா என்று பெயர். இப்பெயரில் சேடிலைட் டெலிபோன் நிறுவனம் ஒன்று உள்ளது.
இந்த நட்சத்திரக் கூட்டத்துக்கு ஆங்கிலத்தில் Pleiades என்று பெயர். ஏழு
சகோதரிகள் என்பது அதன் பொருள். கிரேக்க புராணத்தில் வரும் ஏழு சகோதரிகளின்
பெயர்கள் இந்த நட்சத்திரங்களுக்கு வைக்கப்பட்டன.
வெறும் கண்ணால் பார்த்தாலே இந்த நட்சத்திரக் கூட்டத்தில் ஆறு நட்சத்திரங்கள் தெளிவாகத் தெரியும். பார்வை கூர்மையாக உள்ளவர்களால் ஏழு நட்சத்திரங்களைக் காண இயலும்.
அரேபியர் பல நூற்றாண்டுகளாக கடல் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள். திசைகாட்டும் கருவி கூட இல்லாத காலத்தில் இரவில் நட்சத்திரங்க்ளை வைத்தே திசை அறிந்தனர். ஆகவே பார்வைக் கூர்மை முக்கிய அம்சமாக இருந்தது. எவர் ஒருவரால் வெறும் கண்ணால் கார்த்திகை நட்சத்திரக் கூட்டத்தில் ஏழு நட்சத்திரங்களைக் காண முடிந்ததோ அவர்களே மாலுமிகளாகச் சேர்த்துக் கொள்ளப்பட்டனர் என்று சொல்வார்கள். பல நட்சத்திரங்களுக்கு அரபு வானவியலார் வைத்த பெயர்கள் இன்றளவும் வானவியல் துறையில் அப்படியே பயன்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
வானவியலின்படி கார்த்திகை நட்சத்திரக் கூட்டமானது Open Cluster வகையைச் சேர்ந்தது. தமிழில் இதை நட்சத்திரத் திரள் எனலாம். கார்த்திகை நட்சத்திரத் திரள் சுமார் 450 ஒளியாண்டு தொலைவில் உள்ளது (ஒரு ஒளியாண்டுத் தொலைவு என்பது 9 லட்சத்து 50 ஆயிரம் கோடி கிலோ மீட்டர்).
இந்த நட்சத்திரக் கூட்டம் தோன்றி சுமார் 10 கோடி ஆண்டுகள் ஆகியிருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர். இன்னும் சுமார் 25 கோடி ஆண்டுகளுக்குப் பின்னர் கார்த்திகைக் கூட்டத்தில் உள்ள நட்சத்திரங்கள் வெவ்வேறு திசையில் நகர்ந்து சென்று விடலாம் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வான தளத்தில் உள்ளது. ஆகவே பல பௌர்ணமிகளில் சந்திரன் பூமியின் நிழலுக்குள் இல்லாமல் அதற்கு மேலே அல்லது கீழே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணம் ஏற்படாததற்கு இதுவே காரணம்.அபூர்வமாக சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமியின் நிழலுக்குள் அமைந்து விடும். அப்போது சந்திர கிரகணம் நிகழும்.

| இது டிசமபர் 10 ஆம் தேதி மாலை 6 மணிக்கு வான்காட்சி எப்படி இருக்கும் என்பதைக் காட்டும் படமாகும்.வலது ஓரத்தில் வெண்மை நிற வட்டம் பௌர்ணமி சந்திரன். அதற்கு அருகே Alcyone இருப்பதைக் காணலாம் |
வருகிற டிசம்பர் 10 ஆம் தேதி வேறு ஒரு வகையிலும் விசேஷமானது. அன்று சந்திர
கிரகணம். சூரியன் - பூமி - சந்திரன் ஆகிய மூன்றும் நேர் கோட்டில்
இருப்பதால் பூமியின் நிழல் சந்திரன் மீது விழுகிறது. இதன் விளைவாக சந்திர
கிரகணம் நிகழ்கிறது.
சந்திரனின் சுற்றுப்பாதை சாய்வான தளத்தில் உள்ளது. ஆகவே பல பௌர்ணமிகளில் சந்திரன் பூமியின் நிழலுக்குள் இல்லாமல் அதற்கு மேலே அல்லது கீழே அமைந்திருக்கிறது. ஒவ்வொரு பௌர்ணமியிலும் சந்திர கிரகணம் ஏற்படாததற்கு இதுவே காரணம்.அபூர்வமாக சந்திரன் தனது சுற்றுப்பாதையில் பூமியின் நிழலுக்குள் அமைந்து விடும். அப்போது சந்திர கிரகணம் நிகழும்.
சனிப் பெயர்ச்சி என்பது என்ன?
| இது சனி கிரகத்தின் அரிய படமாகும். சனி கிரகம் சூரியனை மறைத்தபடி இருந்த கட்டத்தில் காசினி விண்கலம் மறு புறத்திலிருந்து இப்படத்தை எடுத்தது. சனி கிரகத்தின் வளையங்கள் ஒளிருவதைக் கவனிக்கவும். படம் நன்றி: நாஸா |
சூரிய மண்டலத்தில் சூரியனை சுற்றும் கிரகங்களில் சனி முக்கியமான ஒன்றாகும். மொத்தமுள்ள எட்டு கிரகங்களில் வியாழன் தான் மிகப் பெரியது. சனி அதற்கு அடுத்த இடத்தை வகிக்கிறது.
சனி கிரகத்தை வானில் காண்பதற்கு டெலஸ்கோப் அல்லது பைனாகுலர்ஸ் தேவையில்லை. வெறும் கண்ணால் எளிதில் காணலாம். ஆனால் அது ஒளிப்புள்ளியாகத் தான் தெரியும். சனி கிரகத்தின் வளையங்க்ள் தெரியாது.
மனிதன் சிந்திக்கத் தொடங்கிய காலத்திலிருந்து வானில் தெரிகின்ற கிரகங்களை ஆராயத் தொடங்கினான். வானில் ஓர் இடத்தில் தென்படுகின்ற ஒரு கிரகம் அதே இடத்துக்கு மறுபடி வந்து சேர எவ்வளவு ஆண்டுகள் ஆகின்றன என்பதைக் கணக்கிடலானான்.
![]() |
| இடது புறத்திலிருந்து மூன்றாவதாக உள்ளது சனி கிரகம். வலப் புறத்திலிருந்து மூன்றாவதாக நீல நிறத்தில் இருப்பது பூமி. |
சனி கிரகம் சூரியனை ஒரு தடவை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. இத்துடன் ஒப்பிட்டால் வியாழன் கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 11.86 ஆண்டுகளை எடுத்துக் கொள்கிறது. கெப்ளர் (Kepler) என்ற ஜெர்மன் வானவியல் நிபுணர் கண்டறிந்து கூறிய விதிகளின்படி ஒரு கிரகம் எந்த அளவுக்கு சூரியனிலிருந்து மிக அப்பால் உள்ளதோ அந்த அளவுக்கு அது தனது சுற்றுப் பாதையில் மெதுவாகச் செல்லும். சூரிய மண்டலத்தில் சனி கிரகம் வியாழனுக்கு அப்பால் ஆறாவது வட்டத்தில் அமைந்துள்ளது.
![]() |
| கொள்ளளவில் சனி கிரகம் பூமியை விட 700 மடங்கு பெரியது |
சென்னை சென்ட்ரல் ஸ்டேஷனிலிருந்து திருவான்மியூருக்கு ஆட்டோவில் வந்து கொண்டிருக்கிற ஒருவர் திருவான்மியூரில் இருக்கிற தனது உறவினரிடம் செல் போனில் சில நிமிஷங்களுக்கு ஒரு முறை எல்.ஐ.சி யில் இருக்கிறேன், ராயப்பேட்டையில் இருக்கிறேன், மயிலாப்பூரில் இருக்கிறேன் என்று தாம் கடக்கும் இடங்களை வரிசையாகச் சொல்லிக் கொண்டே வருவதாக வைத்துக் கொள்வோம். கிரகங்களும் இவ்விதமாகத் தான் வானத்து ராசிகளைக் கடந்து செல்கின்றன.
![]() |
| சனி கிரகம் A என்ற இடத்திலிருந்து B என்ற இடத்துக்கு நகர்ந்துள்ளது - இதுவே சனிப் பெயர்ச்சியாகும். இப்படத்தில் 1. சூரியன். 2. பூமி. |
![]() |
| சனி கிரகத்தின் இன்னொரு தோற்றம் |
வியாழன், யுரேனஸ், நெப்டியூன் ஆகியவற்றுக்கும் வளையங்கள் உள்ளன என்றாலும் அவை மெல்லியவை. ஆகவே அவை எடுப்பாகத் தெரிவதில்லை. ஆனால் சனி கிரகத்தின் வளையங்கள் கண்ணைக் கவர்கின்றன.
![]() |
| சனி கிரகத்தின் வளையங்களில் ஒரு பகுதி |
![]() |
| படம்-1 ஹப்புள் எடுத்தது |
![]() |
| படம்-2 ஹப்புள் எடுத்தது |
1979 ஆம் ஆண்டில் தொடங்கி பயனீர்--1, வாயேஜர்-1, வாயேஜர்-2 ஆகிய ஆளில்லா விண்கலங்கள் சனி கிரகத்தை ஆராய்ந்தன. 1997 ஆம் ஆண்டில் செலுத்தப்பட்டு 2004 ஆம் ஆண்டில் சனி கிரகத்தை சென்றடைந்த காசினி-ஹைகன்ஸ் (Cassini-Huygens) விண்கலம் தொடர்ந்து சனி கிரகத்தை ஆராய்ந்து படங்களை அனுப்பி வருகிறது.
ரோமானிய புராணத்தில் சனி விவசாயத்தின் கடவுளாகக் கருதப்படுகிறார். இந்திய ஜோசிய முறையில் சனி கிரகம் பாபக் கிரகமாக, கெடுதல் செய்வதாகக் கருதப்படுகிறது.
ஜோசியத்தில் நம்பிக்கை வைப்பது அவரவர் விருப்பம். ஆனால் ஜோசியத்தில் நம்பிக்கை உள்ளவர்களும் சரி, நம்பிக்கை இல்லாதவர்களும் சரி, சனி கிரகத்தின் பெயரையே வசைச் சொல்லாக ஆக்கி விட்டனர். ‘சனியன் பிடித்த பஸ் தினமும் லேட்டா வருது’. ’சனியன் பிடித்த மழை எப்ப நிக்குமோ தெரியல?’. இப்படியாக எதற்கெடுத்தாலும் சனி கிரகத்தைத் திட்டித் தீர்ப்பது வேதனைக்குரியதாகும்.
சனி கிரகத்தை டிசம்பர் 22 ஆம் தேதி தென் கிழக்கு வானில் அதிகாலை 5 மணி வாக்கில் காணலாம் (கீழே வரைபடம் காண்க). அடிவானில் சந்திரன் பிறையாகத் தெரியும். அதற்கு மேலே பக்கம் பக்கமாக இரு ஒளிப் புள்ளிகள் தெரியும். இடது புறம் இருப்பது சனிக் கிரகம். வலது புறம் இருப்பது சித்திரை (Spica) நட்சத்திரமாகும்.
![]() |
| டிசம்பர் 22 காலை 5 மணி: தென் கிழக்கு அடிவானில் சந்திரன். பிறைக்கு மேலே இடது புறம் சனி, வலது புறம் சித்திரை (Spica) |
திங்கள், 26 செப்டம்பர், 2016
மூன்று வழிபாடுகள் முக்கியமானவை
இந்து சமயம் மூன்று வழிபாடுகள் முக்கியமானவை என்று திட்டவட்டமாக வரையறுக்கிறது.இம்மூன்று வழிபாடுகளை முறைப் படிச் செய்யாமல் எந்தப் பரிகாரம் செய்தாலும் ,எவ்வளவு பயனும் கிடைக்காது என்பது ஒட்டு மொத்தச் சாத்திரங்களும் ஓங்கிய குரலில் சொல்லும் தலையாய உண்மையாகும்.
மூன்று முக்கியம்:…
வாழையடி வாழையாக நாம் பிறந்த குலம் வளங்களைக் காண வழி செய்பவை மூறு வழிபாடுகளாகும்.
அவை:
குலகுரு வழிபாடு ,
குல தெய்வ வழிபாடு ,
குல முன்னோர் வழிபாடு.
ஒவ்வொரு குடும்பத்துக்கும் குலகுரு ஒருவர் இருப்பார்.அவரே அவர் குலத்துக்குச் சமயம் சார்ந்த வாழ்வியலுக்கு வழிகாட்டி ;ஞானம் அளிப்பவரும் கூட .உங்கள் குலகுரு யார் என்பதை அறிந்து ,அவரை இயலும் போதெல்லாம் வழிபட வேண்டும்.குலகுரு யார் என்பது தெரீயவெ இல்லை என்றால் ,உங்கள் மனம் ஈடுபடக்கூடிய மரபு வழிபட்ட துறவியைக் குருவாக ஏற்கலாம்.எது எப்படி ஆனாலும் குலகுரு வழிபாடு மிக முக்கியமானது ஆகும்.
அடுத்தது குலதெய்வ வழிபாடு,ஒவ்வொரு குடும்பத்துக்கும் தனித்தனியே குல தெய்வங்கள் உண்டு.அவை கிராம தேவதைக் கோவில்களாகவே இருக்கும்.அவரவர் தம் குல தெய்வ கோயில்களுக்கு இயலும் போதெல்லாம் செல்ல வேண்டும்.வருடம் ஒரு முறையாவது செல்ல வேண்டும்.
மூன்றாவது முக்கியமான வழிபாடு நீத்தார் வழிபாடாகும் .இறந்து போன முன்னோர்கள் நீத்தார் எனப்படுவர்.தாத்தா ,பாட்டி,அம்மா,அப்பா முதாலான முதியவர்களை வாழும் காலத்தில் வயதான நிலையில் ஆதரிக்க வேண்டும்.
அவர்களைப் பேணிப் பாதுகாக்க வேண்டும்.இருக்கும்போது உதவியோடு இறந்த பின்னரும் அவர்களை நினைவு கூற வேண்டும்.
ஒருவர் இறந்த நாள்,திதி அடிப்படயில் நினைவு கூற வேண்டியதாகும்.எந்த மாதத்தில் இறந்தார்கள் ,வளர்பிரையிலா ,தேய் பிறையிலா என்று பார்க்க வேண்டும்.அதன் பின் எந்த திதியில் இறந்தார்கள் என்பதைக் குறித்துக் கொண்டு ,அந்தத் திதி நாளில் திதி தர்ப்பணம் திவசம் செய்வது முக்கியமான கடமையாகும்.
தென்புலத்தார் :
இறந்து போன முன்னோரைப் “பிதிரர்”என்பர்.இவர்கள் வாழுமிடம் பிதிர்லோகன் எனப்படும்.இதனை வள்ளுவர்
“தென்புலம்”என்பார்.தென் புலத்தில் வாழும் முன்னோர்களுக்கு வழிப்பாடு செய்வதற்கு முதனை தருகிறார் வள்ளுவர்.
தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று ஆங்கு
ஐம்புலத்து ஆறு ஓம்பல் தலை.
என்பது குறள்.
நீத்தருக்கு நீர்க் கடன் தருதல்,தமிழர்களிடம் வழக்கத்தில் இருந்து மிகவும் பழமையான வழியே ஆகும்.இடைச் சங்க காலத்தில் இருந்த பாண்டிய மன்னரால் ஒருவன் ,பளுஆக சாலை முது குடுமிப்பெருவழுதி என்பவன்.இவன் காலத்தில் இருந்த புலவருள் ஒருவர் நெட்டிமையார் என்ற புலவர்.இவர் ‘புதல்வர்கள் பொன் போன்றவர்கள் தம்முன்னோருக்கு நீர்க்கடன் தருவதால் இப்பெருமைக்கு இவர்கள் உரியவர்கள் ஆகிறார்கள்’ என்கிறார்.
தென்புல வாழ்நாக்கு அருங்கடன் இகுக்கும்
பொன்போல் புதல்வர்’ என்கிறார் அவர் .
முறைப்படி செய்யும் நீத்தார் கடன்கள் முன்னோரை மகிழ்விக்கும்.பிதுர் ஆசி இருப்பின் எல்லா நலன்களும் விளையும்.
தர்ப்பண நாட்கள் :
எள்ளும்,நீரும் முன்னோருக்கு அளித்தால் நீர்க்கடன் தருதல் எனப்படும்.இதனைத் தர்ப்பணம் தருதல் என்பர்.முன்னோருக்குரிய இறந்தநாளில் திவசம் தருதல் வேண்டும்.படையால் இடுவது உண்மையான தமிழர் வழிபாடாகும்.இறந்தநாள் மட்டுமில்லாமல்,இன்னும் பலநாட்களும் முன்னோர் வழிபாட்டுக்குரிய நாட்களாக தர்ம சாத்திரத்தில் சொல்லப்பட்டுள்ளன.
அமாவசை நாட்கள்,மாதப்பிறப்பு நாட்கள் ,மாளய பட்ச நாட்கள் என்பன முன்னோரை வழிபடுவதற்குரிய நாட்களாகும்.இந்த எல்லா நாட்களிலும் நீர்க்கடன் தராவிட்டாலும் ஆடி,தை மற்றும் மாளய பட்ச அம்மாவாசை நாட்களிலாவது நீர்க் கடன் தருதல் வேண்டும்.
மாளய பட்சம் :
மண்ணுலகின் தென்திசையில் வாழும் முன்னோர்கள்,தாம் வாழ்ந்த பகுதிக்கு வருகை தரும் நாட்கள் மாளய பட்ச நாட்களாகும்.புரட்டாசி மாத அமாவாசை மாளய அமாவாசை ஆகும்.அதற்கு முன் உள்ள நாட்கள் மாளய பட்சம் எனப்படும்.இந்த நாட்களில் நீர்க்கடன் தருவது நல்லது.தமுன்னோருக்குரிய திதி நாளில் திவசம் தரலாம்.குடும்ப வழக்கப்படி படையலும் இடலாம்.
மாளய பட்ச நாட்களில் மகாபரணி (23.09.13),மகாவியதீபாதம் (26.09.13),மத்யாஷ்டமி(27.9.13) சன்யஸ் த மகாளயம்(1.10.13)கஜச் சாய புண்ய காலம் (2.10.13) மகாத்ரயோதசி (2.10.13) மாளய அமாவசை (4.10.13) முக்கியமானவை . வரும் 20.09.13 வெள்ளிக்கிழமை மாளய பட்சத் துவக்கம்.
நீர்க்கடன் முக்கியம்:
மாளய பட்ச நாட்கள்;இல் தகுந்தவர் துணையுடன் நீர்க்கடன் தருவது மிகவும் முக்கியமானதாகும்.இந்த நாட்களில் ஆறு அல்லது குளங்களில் ,ஈர உடையுடன் நீரினை இரண்டு கைகளாலும் எடுத்து,தெற்குப் பார்த்து முன்னோரை நினைத்து நீரினை நீர்நிலையில் சேர்க்கலாம்.ஆறு குளத்தில் குளிக்க வாய்ப்பு இல்லாதவர்கள் ,முன்னோரி நினைத்துக் கொண்டு ஒரு பெரிய பாத்திரத்தில் இருந்து இரண்டு கைகளாலும் நீரினை எடுத்து தெற்குப் பார்த்து வணங்கி இன்னொரு பாத்திரத்தில் சேர்க்கலாம்.வசதி வாய்ப்புள்ளவர்கள் ராமேஸ்வரம் ,பூம்புகார் போன்ற கடல் துறைகளுக்கு சென்று திதி தர்ப்பணம் தருவது புன்னியப் பலனைக் கொடுக்கக் கூடியதாகும்.
ஓங்காரம்(பிரணவம்)
எந்த மொழியிலும் எழுத்துகள் பிறப்பதற்கு மூல காரணமாக இருப்பது ஒலியே. அந்த ஒலியே பிரவணம் எனப்படும். வாயைத் திறந்து உள்ளிருக்கும் மூச்சுக் காற்றை வெளியிடும்போது ‘ஓ’ என்ற உருவமற்ற ஒலி பிறக்கின்றது. அவ்வொலியின் கடைசியில் வாயை மூடும்போது ‘ம்’ என்ற ஒலி தோன்றுகிறது.
இந்த ”ஓம் – ஓம்” என்ற ஒலியையே பிரணவம் என்று கூறுவர்.
ஓம் என்னும் மூலமந்திரம், இறைவனை அம்மையப்பனாக வுணர்த்தும் ஒலிவடிவாகும். அது ஓ என்னும் ஒரே யெழுத்தே. இன்னிசைபற்றி மகர ஈறு சேர்க்கப்பட்டது. ஓங்காரம் எனினும் ஓகார மெனினும் பொருளளவில் ஒன்றே.
வடமொழியில் அகரவுகரம் புணர்ந்து (குல + உத்துங்கன் = குலோத்துங்கன் என்பதுபோல்) ஓகாரமாவது நோக்கியும், எழுத்துப் பேறான மகரத்தைச் சொல்லுறுப்பாகக் கொண்டும், ஓம் என்பதை அ + உ + ம் எனப் பிரித்து, அம் மூவெழுத்தும் முறையே முத்திரு மேனியரையுங் குறிக்குமென்றும், சிவனையும் சிவையையும் மாயையையுங் குறிக்குமென்றும், ஆதனையும் (ஜீவாத்துமாவையும்) பரவா தனையும் (பரமாத்துமாவையும்) மாயையையுங் குறிக்கு மென்றும், பலவாறு கூறுவர்.
ஓங்காரம் ஒரேயெழுத் தென்பதை,
“ஓரெழுத் தாலே யுலகெங்குந் தானாகி” (திருமந்திரம் 765)
“ஆறெழுத் தோதும் அறிவார் அறிகிலர்” (திருமந்திரம் 941)
என்பவற்றாலும், ஓங்காரம் அம்மையப்பனையுணர்த்தும் எழுத் தென்பதை
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே ஒருமொழி
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே உருஅரு
ஓம்எனும் ஓங்காரத் துள்ளே பலபேதம்
ஓம்எனும் ஓங்காரம் ஒண்முத்தி சித்தியே
-திருமந்திரம் 2627-
ஓங்காரத் துள்ளே யுதித்த ஐம்பூதங்கள்
ஓங்காரத்த் துள்ளே யுதித்த சராசரம்
ஓங்கார தீதத் துயிர்மூன்றும் உற்றனை
ஓங்கார சீவ பரசிவ ரூபமே
-திருமந்திரம் 2628-
என்பவற்றாலும் அறியலாம்.
உலகம் தோன்றுவதற்கு முன்பு பிரவண ஒலியே நிலவி இருந்தது என்றும், பிரணவத்திலிருந்து விந்துவும், விந்திலிருந்து நாதமும் அதிலிருந்து உலகமும் உயிர்களும் ஒன்றிலிருந்து ஒன்றாகத் தோன்றின எனத் தத்துவ நூல்கள் கூறுகின்றன.
ஓம் என்பது பிரணவ மந்திரமாகும. இது அ + உ + ம் என்ற மூன்றெழுத்தின் இணைப்பே ‘ஓம்’. மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம்தான்.
ஓம் என்ற பிரணவன் “அ” என்பது எட்டும் “உ”என்பது இரண்டும் என்ற எண்களின் தமிழ் வடிவம்.
உயிர் எழுத்தும் மெய் எழுத்தும் சேர்ந்து உயிர்மெய்த்தாவது போல்
உயிரும் உடலும் சேர்ந்ததுதான் மனித வாழ்வு.
அவரவர் கையால் மனிதனின் உடல் எண் சாண் அளவுடையது. மனிதன் விடும் இரு வகை மூச்சுகள். (உள் மூச்சு வெளி மூச்சு)
” உ ‘ எழுத்து குறிக்கும் மூச்சு உள் மூச்சு வெளி மூச்சு. ” ம் ‘ ஆறு அறிவின் உணர்வு இயக்கத்தால் எற்படும் இன்பத்தை அது குறிக்கும்
அத்துடன் ” ஓம் ” என்ற பிரணவம் 96 தத்துவத்துடன் விளங்கும். அ உ ம் என்ற எழுத்துக்களால் குறிக்கும் பெருக்கு தொகை 8 x 2 x 6 = 96.
இதனை சிலர் இப்படியும் கூறுவார்கள்:
அ என்பது முதல்வனான சிவனையும் உ என்பது உமையவள் எனப்படும் சக்தியினையும், சிவனும் சக்தியும் இணைந்த சிவசக்தியினையும் குறிக்கும்.
இச்சிவசக்திவடிவமே, சொரூபமே வரி வடிவில் ” ஓ ” என பிள்ளையார் சுழியாகவும், “உ” எனவும் உள்ளது. வழிப்படும் உருவவாக ‘சிவலிங்கமும்’ ஒலி எழுத்தாக சொல்லும்போது ஓங்காரம் பிரணவம் என்றும் ஆன்றோர்களும், சான்றோர்களும் சொல்கிறார்கள்.
முதல் எழுத்து:
“ஆதியிலே பராபரத்திற் பிறந்த சத்தம்
அருவுருவாய் நின்ற பாசிவமுமாகி
தோதியென்ற சிவனிடமாய்ச் சத்தியாகித்
தொல்லுலகில் எழுவகையாந் தோற்றமாகி ”
என்னும் சுப்பிரமணிய ஞானத்திலிருந்து அறியலாம்.
சட்டை முனியும் தனது சூத்திரத்தில் :
” ஒடுக்கமடா ஓங்காரக் கம்பமாச்சு
ஓகோகோ அகாரமங்கே பிறந்ததாச்சு ”
– என்றும் குறிப்பிட்டுள்ளார்.
சிவன், சக்தி, சிவசக்தி மூலத்தைக் குறிக்கும் ஓங்கார மந்திரத்திற்க்கும் முதல் எழுத்தாகவும் இதுவே ” அ ” உள்ளது. அத்துடன் எழுத்துக்களைக் குறிக்குங்கால், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், சமஸ்கிருதம் முதலிய மொழியிலும் இதுவே முதல் எழுத்து.
” அகரமுதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு ”
என்ற வள்ளுவர் முதல் குறள் மூலமும்,
அகத்தீசப் பெருமான் தனது மெய்ஞான சூத்திரத்தில்,
அவ்வாகி உவ்வாகி மவ்வுமாகி,
ஐம்பத்தோ ரெழுத்துக்கு தியாகி ”
அகாமுதல் அவ்வைமுத்தும் தியாகும்
அறிந்தோர்க்கு இதிலேதான் வெளியதாகும் ”
என்று பாடியுள்ளத்தின் மூலம் நன்கு அறியலாம்.
உருவமும்- உடலும்
உடம்பை உருவைக் குறிக்கும் போது ஏற்கனவே குறித்தப்பிட்டபடி
இதுவே கருவில் தரிக்கும் பிண்டத்திற்குக் காரணமாய் விளங்குகிறது.
ஆண்டவன் அவ்வெழுத்தின் உருவமாய் உடம்பினுள் அமைந்துள்ளார்
என்பது கீழ்காணும் மெஞ்ஞான முனிவர்களது பாடல் மூலம் விளங்கும்.
“கண்டது அவ்வென்னுங் கடைய தோரட்சாம்,
பிண்டத்துக் குற்பத்தி பிறக்கு மிதிலே”
– மச்சைமுனி தீட்சை ஞானம்
உந்தியினுள்ளெ அவ்வும் உவ்வுமாய் மவ்வுமாகி
விந்துவாய் நாதமாகி விளங்கிய சோதிதன்னை
– அகஸ்தியர் முதுமொழி ஞானம்.
மேலும் இது வாயைத் திறந்தவுடன் நாக்கு, அல்லது மேல் வாயைத்
தீண்டாமலேயே தொண்டையின் மூலமாய் பிறக்கும் ஓசை பேசும் போது
உண்டாகும் எல்லா ஒலியையும் விட மிகவும் இயற்கையானது.
இது பற்றி யூகிமுனி தனது வைத்திய சிந்தாமணி 800 – ல்
அவ்வென்னும் அட்சாத்தில் நாடிதோன்றும்
அந்நாடி தானின்று தத்துவந் தோன்றும்
எவ்வென்னு மெலும்பு தசை புடை நரம்பும்
ஈலிட்டு பழுவோடிரண்டு கொங்கையுமாம்
முவ்வென்று முட்டுக்கால் விளையீரெட்டாம்
முட்டியமைத் தங்ஙனே யோருருமாக்கி ”
என்று கூறியுள்ளதன் மூலம் உருவம் உடம்பிற்கும் இதுவே முதல்
காரணமென நன்கு தெளிந்துணரலாம்.
ஓங்காரம், பிரவணம். இது எல்லா எழுத்து ஒலிகட்கும் முதலாக விருந்து அகத்தும், புறத்தும், இயற்கையாய் ஒலிக்கும் ஓசை. இது உந்தியின் கீழ் தங்கி நிற்கும்.
இதை விளக்கும்படி திருமூலர்,
ஓங்காரம் உந்தி கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா வகாரமும் நீள் கண்டத் தாயிடும் ” என்று கூறியுள்ளார்.
ஓங்காரத்தி தத்துவம், அ உ ம் எனமித்து ஒலி எழுப்புவது.
அகாவொலி முதற்பிரிந்து படைத்தற் தொழிலையும், உகாரவொலி பின் தோன்றிக் காத்தல் தொழிலையும். மகாரவொலி முடிவாதலின் அழித்தற் தொழிலையும் ஆக முத்தொழிலையும் ஒருங்கே இணைத்து அடக்கி நிற்கும்.
“ஓம்” எனும் தாரக மந்திரத்தை தனிமையாக இருந்து ஏகாந்த தியானம் செய்தால் இதன் பலன் அதிகம். ஐம்புலன்களின் தொழில்கள் இயக்கம் அடைந்து மனது நிலைபெறும். ஐம்புலக் கதவு அடைபடும். தன்னையும், உலகையும் மறந்து நிற்க ஆசாபாசங்கள் மறந்து மனம் நிலைப்படும்.
குறுகிக் கிடந்த மனம் விசாலமடையும்.மெய்ஞான விசாரணை விளைந்து, அதனால் வாழ்க்கையும் வேதனைகளும் இல்லாத ஒன்றாகிவிடும். இந்த விரிந்த அண்டப்பார்வை உண்டாகும்.
“ஓம்” என தியானிப்பதால் அநேக சித்திகள் கைகூடும். அதனால் ஒழுக்கம் ஏற்பட்டு உண்மை அறிவு இன்னதென்று நன்கு நமக்கு விளங்கும். இதன் மூலம் ஒளியை தரிசித்து மனத்திருப்தி,மெய், முகம், ஆகியவற்றில் ஒரு தெளிந்த பிரகாசமிக்க ஒளி, அறிவு உயர்ந்து மற்றோருக்கு வழிகாட்டும் தன்மை நீங்களும் காணலாம்.
ஆனால் முயன்றால் நிச்சயம் சாதித்துவிடலாம். ஒரே சமயத்தில் மனதின் வெவ்வேறு ஓட்டங்களை, நாம் விரும்பிய பாதைகளில் செல்லுமாறு செய்வதுதான் அடிப்படையானது. அப்பட அருஞ் சாதனையைப் பழக்கப் படுத்திக்கொள்ளும்போது ஒரே நேரத்தில் மூன்று நான்கு காரியங்களிலாவது மனதை, கவனத்தைச் செலுத்தலாம். வேகமாக சிந்திக்கலாம். சிந்தனையின் பல படிகளைத் தாண்டி முடிபுகளை விரைவாக அடையலாம்.
போன்றவை எளிதானவைதானே!
பலர் காயகல்பம் பற்றி கேள்விப்பட்டு இருப்பார்கள். இதை உண்டவர்கள் நரை, திரை மாறி பொன்போல் உடல் ஒளிர்ந்து – சாவில்லாது என்றும் இளமையுடன் வாழலாம் என்பர்கள். ஆயினும் அந்த காயகல்பம் கிடைப்பது அரிது. இருப்பினும் நாம் காயகல்பம் பெற ஒரு வழி உண்டு.
அதிகாலை எழுந்ததும், இரவில் படுக்கபோகும் பொழுதும் நாள் தவறாது பத்து நிமிட மணித்துளிகள் ‘ ஓம் ‘ என்னும் மந்திரத்தை மனதால் உச்சரிக்க வேண்டும்.உச்சரிக்கும் போது நமது மூக்கின் வலப்பகுதி துவார வழியாக காற்றை சுவாசித்து இடப்பக்க மூக்குத் துவார வழியாக காற்றை வெளியிட
வேண்டும்.
“ஏற்றி இறக்கி இருகாலும் பூரிக்கும்
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாரில்லை
காற்றைப் பிடிக்கும் கணக்கறி வாளர்க்குக்
கூற்றை உதைக்கும் குறியது வாமே ” – என்கிறார்.
இருகாலும் என்பது இரு காற்று வழி. இடகலை, பிங்கலை. அவ்வாறு இரண்டாகப் பிரிக்காது இரு வழியாகவும் மூச்சுக்காற்றை ஒரே முறையில் ஏற்றிப் பின்பு இறக்கிப் புருவமத்தியில் பூரிக்கச் செய்தல் வேண்டும். இவ்வாறு காற்றை முறையாக ஏற்றி இறக்கும் கணக்கை இவ்வுகத்தார் அறியவில்லை. அவ்வாறு அறிந்தவர்கள் பிறப்பு இறப்பு சுழற்சியை வெல்லும் ஆற்றல் அறிந்தவர்கள்.
வாழும் கலை என்று மனிதரை நீண்ட நாள் வாழ வைக்கும் கலையினை நம் பண்டைப் பெருமைக்குரிய சித்தர்கள் ‘தாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெறுக’ என்ற நோக்கில் தெளிவாக சொல்லியுள்ளார்கள்.
காயசித்தியின் பெருமையினை ‘காகபுசண்டர்’ பாடலைக் காண்போம் :
பாரப்பா பன்னிரண்டு முடிந்துதானால்
பாலகன் போலொரு வயது தானுமாச்சு
நேரப்பா இருபத்தி நான்கு சென்றால்
நேர்மையுள்ள வயது மீரண்டாகும்
சீரப்பா முப்பத்தி ஆறுமானால்
சிறப்பாக மூன்று வயதாச்சுதப்போ
தாரப்பா பன்னிரண்டுக்கோர் வயதாய்த்
தான் பெருக்கி வயததுவை எண்ணிக்கொள்ளே ….
ஒன்றில்லாமல் ஒன்றிலில்லை. இதனை மெய்பிக்கவே சிவனும் – சக்தியும். உலக மாந்தர்களும் அவ்வாறு எண்ணி ஒழுகல் வேண்டும். ஆணும் – பெண்ணும் சேர்ந்ததே வாழ்வு. வாழ்வில் இன்ப – துன்பம் எல்லாவற்றிலும் இருவருக்கும் சம பங்கு உண்டு என்பதை மெய்பிக்கவே, விளக்கவே அர்த்தநாரீஸ்வரர் உருவமாக சரிபாதி உடல்.
“ஓங்காரத் துள்ளொளி உள்ளே உதயமுற்
றாங்கார மற்ற அனுபவங் கைகூடார்
சாங்கால முன்னார் பிறவாமை சார்வுறார்
நீங்காச் சமயத்துள் நின்றொழிந் தார்களே.”
ஓங்காரத்தில் உள்ளொளி வண்ணமாக இருப்பவன் சிவன். அவன் அருளின் தோற்றம் அங்கே உண்டாக ஆங்காரம் ஒழிந்து சிவனடியின் இன்ப நுகர்வு கைவரும். இந்நிலை கிட்டாதோர்க்கு இறப்பு உண்டென எண்ணமாட்டார். எனவே பிறவாமை கிட்டாது. தனால் பிறப்பு இறப்பினைத் தரும் புறச்சமய நெறியில் உழல்வர்.
படத்தை உற்றுப் பாருங்கள். விநாயகரின் தலை “ஓம்” உடன் பொருந்தியிருக்கிறது அல்லவா? “ஓ”வின் இரு சுழிகள் இரு கண்கள். ஞானத்தின் ஆதிமூலம் விநாயகர் என்பது இதற்காகத்தான். விநாயகரின் தலையும் மனிதனின் தலையும் ஒன்றுதான். ஞானத்தின் இருப்பிடம் தலையில்தான். ஆக, பிரணவம் எனும் “ஓம்” மனிதனின் தலைக்குள்தான் உள்ளது.
இந்து மத வழக்கங்களின் பின்னணியில் உள்ள அருமையான அறிவியல் காரணங்கள்!!!
பல ஆயிரம் ஆண்டு காலமாக சில இந்து மத வழக்கங்கள், இன்றளவும் கூட மிகவும் தீவிரமாக பின்பற்றப்பட்டு வருகிறது – அதனை மூட நம்பிக்கை என்றும் கூறலாம், வழக்கங்கள் என்றும் கூறலாம், மற்றவர்கள் மனதில் பயத்தை உண்டாக்குவதற்கு மற்றொரு வழி என்றும் கூறலாம், இந்த வழக்கங்களின் அவசியத்தைப் பற்றி நம்மில் பலரும் கேள்வி எழுப்புவோம். இன்றைய நவீன உலகத்தில் இவைகள் எப்படி தொடர்புடையாதாக இருக்கும் என நாம் வியக்கவும் செய்வோம். இதற்கு முன்னால் பின்பற்றப்பட்டு வந்த இந்த பழக்க வழக்கங்களை நம்மில் பலரும் இன்றைய காலத்தில் மூட நம்பிக்கைகளாக கருதி புறக்கணித்து விடுவோம். ஆனால் அனைத்து இந்து மத மரபுகளும் மூடநம்பிக்கைகளா? இதற்கான பதில் என்னவென்று தெரிந்தால் நீங்கள் ஆச்சரியப்பட்டு போவீர்கள். இந்து மதம் அடிக்கடி கேள்வி எழுப்பப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்டு, மூட நம்பிக்கைகள் மற்றும் குருட்டுத்தனமான நம்பிக்கைகளை ஊக்குவிப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இதற்கும் உண்மைக்கும் ரொம்ப தூரமாகும். இந்து மதத்தின் பல்வேறு சடங்குகள், பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளுக்குப் பின்னால் அறிவியல் சார்ந்த காரணங்கள் உள்ளது. கேட்க அர்த்தமற்றதாக இருக்கலாம். ஆனால் இதனை ஆழமாக பார்க்கையில், இந்த பழக்க வழக்கங்களுக்கான உண்மையான காரணம் புலப்படும். அதனை அறியும் போது நீங்கள் வியப்புக்குள்ளாவீர்கள். இந்து மத மரபுகள், அணிகலன்கள் அணிவது மற்றும் இந்துக் கோவில்களின் பின்புலத்தில் உள்ள அறிவியல் சார்ந்த காரணங்களைப் பற்றி நாங்கள் ஏற்கனவே கூறியிருக்கிறோம். இப்போது சில விந்தையான இந்து மத மரபுகளின் பின்புலத்தில் இருக்கும் அருமையான அறிவியல் காரணங்களைப் பார்க்க போகிறோம்.
கிரகண பயம் பல இந்துக்களின் வீட்டில், கிரகணத்தின் போது வீட்டை விட்டு வெளியே செல்ல அனுமதிப்பதில்லை. அந்த நேரத்தில் கிரகத்தை நேரடியாக பார்க்கவும் அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். குறிப்பாக இந்நேரத்தில் கர்ப்பிணி பெண்கள் வீட்டிற்குள் தான் இருக்க வேண்டும்; அப்போது தான் அவர்கள் வயிற்றில் உள்ள குழந்தை எந்தவித குறைபாடும் இல்லாமல் பிறக்கும். அதே போல் கிரகணத்தின் போது உணவருந்தவோ சமைக்கவோ கூடாது எனவும் நம்பப்படுகிறது. சில வீடுகளில் ஒவ்வொரு உணவு பண்டத்தின் மீதும் துளசி இலை போடுவார்கள். இதனால் அந்த உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும் என்பது அவர்களின் நம்பிக்கை.
கிரகண பயம் இதிலுள்ள ஒரே பிரச்சனை என்னவென்றால், கிரகணத்தை நேரடியாக உங்கள் கண்களால் பார்த்தால், சூரிய ஒளியின் தீவிரத்தால் உங்கள் விழித்திரை வெகுவாக பாதிக்கப்படும். ஒளி உணர் அணுக்களுக்கும், கம்பிகளுக்கும் பாதிப்பு ஏற்படுவதால், சில நேரங்களில் விழித்திரை எரிச்சல் கூட உண்டாகலாம். மேலும் கிரகணத்தின் போது, நுண்ணுயிரிகள் முனைப்புடன் செயல்பட்டு உணவுகளை கெடச் செய்யும். அதனால் உணவுகளில் துளசி இலையை போடும் போது, அதிலுள்ள மருத்துவ குணங்களால் உணவுகள் கெட்டுப் போகாமல் இருக்கும்
வடக்கை நோக்கி தலை வைத்து படுக்காதீர்கள் வடக்கு என்பது சாத்தானின் திசை என்பதே இதற்கு பின்னணியில் நீங்கள் அறிந்திருக்கும் ஒரே காரணமாக இருக்கும். அதனால் அந்த திசையை நோக்கி தலை வைத்து தூங்காதீர்கள் என கூறுவார்கள். இருப்பினும் இதற்கு பின்னால் உள்ள உண்மையான காரணம் என்னவென்று தெரியுமா? வடக்கு திசையில் தலை வைத்து படுக்கும் போது, அது வட துருவம் என்ற காரணத்தினால், உங்கள் தலை ஒரு காந்தமாக செயல்படும். தூங்கும் போது வடக்கு திசையை நோக்கி தலை இருந்தால், உடலின் வட துருவமும் பூமியின் வட துருவமும் ஒன்றோடு ஒன்று தள்ளும். இதனால் உங்கள் இரத்த ஓட்டம் பாதிக்கப்படும்.
இரவு நேரத்தில் அரச மரம் அருகில் போகாதீர்கள் இரவு நேரத்தில் அரச மரத்தில் பேய் குடி கொண்டிருக்கும் என்பதெல்லாம் பொய். அந்த நேரத்தில் தான் மரத்தில் இருந்து கார்பன் டை ஆக்சைடு வெளிவரும். இது மனிதர்களுக்கு நல்லதல்ல. அதனால் இரவு நேரத்தில் அரச மரம் அருகில் போக வேண்டாம்
எலுமிச்சை மிளகாய் திருஷ்டி கயிறு எலுமிச்சை மிளகாய் திருஷ்டி கயிறு என்பது தீய கண்களில் இருந்து உங்களை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. எலுமிச்சை மற்றும் பச்சை மிளகாய் மூடநம்பிக்கை தோன்ற காரணமாக இருந்தது என்னவென்று தெரியுமா? அவைகளுடைய குணப்படுத்தும் குணத்தினாலேயே. இவை இரண்டிலுமே பல வைட்டமின்கள் அடங்கியுள்ளது. அதனால் தான் நம் முன்னோர்கள் அதன் பயனை விளக்கும் விதமாக அதனை சடங்குகளில் பயன்படுத்தினார்கள். அதுவே நாளடைவில் ஒரு புகழ் பெற்ற வழக்கமாக மாறி விட்டது
ஈமச்சடங்கு முடிந்த பிறகு குளித்தல் பிரேத ஆத்மாக்கள் உங்களை பிடித்து விடும் என்ற மூட நம்பிக்கையைத் தான் இதற்கு காரணமாக பலரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மை என்னவென்றால், அது நுண்ணுயிர்கள் சம்பந்தப்பட்டவையாகும். ஒருவர் இறந்த பிறகு அவர் உடல் கொஞ்சம் கொஞ்சமாக அழுகத் தொடங்கும். ஈமச்சடங்கில் கலந்து கொள்பவர்கள் இறந்த நபருக்கு அருகில் தான் இருக்க வேண்டி வரும். இதனால் அழுகிக் கொண்டிருக்கும் இறந்த உடலில் இருந்து வரும் பாக்டீரியாக்களால் நீங்கள் பாதிக்கப்படலாம். அதனால் தான் ஈமச்சடங்கை முடித்த கையோடு, பிற வேலைகளை செய்வதற்கு முன் குளிக்க வேண்டும்.
பயணத்திற்கு முன் தயிரும் சர்க்கரையும் உண்ணுவது வீட்டை விட்டு வெளியேறுவதற்கு முன், தயிரும் தேனும் கொடுப்பது இரு வழக்கமாக உள்ளது. இது அதிர்ஷ்டமானது என நம்பப்படுகிறது. தயிரில் கால்சியம் மற்றும் புரதம் உள்ளது. கூடுவே இயற்கை சர்க்கரையும் சிறிதளவில் உள்ளது. இதனால் வயிற்றுக்கும், செரிமான அமைப்பிற்கும் நல்லதாகும். அதனால் வெளியே செல்லும் முன் இதனை உண்ணச் சொல்கிறார்கள். இதில் குளிர்ச்சி தன்மையும் உள்ளது. அதனால் அழுத்தம் நிறைந்த வேலைகளை செய்ய கிளம்புவதற்கு முன் இதனை உண்ண வைக்கிறார்கள்.
பாம்பை கொன்ற பிறகு அதன் தலையை நசுக்குவது பாம்பை கொல்ல முயற்சி செய்பவரை பாம்பு அதன் கண்களால் படிந்து வைத்துக் கொள்ளும் என கூறுவார்கள். அதனால் அதன் தலையை நசுக்கி கொல்லுவார்கள். ஆனால் அதற்கு சொல்லப்படும் காரணம் தவறானது. பாம்பை கொன்ற பிறகும் கூட அதன் பல்லில் விஷம் இருக்கும். இதனால் அது இறந்தாலும் ஆபத்தானதே. அதனால் பாம்பின் தலையை நசுக்கினால் அந்த விஷம் அழிந்து விடும். துண்டிக்கப்பட்ட பாம்பின் தலை எதிர் செயலாற்றி, கடிக்க செய்யலாம்.
குடையை வீட்டிற்கு வெளியே திறப்பது குடையை வீட்டிற்குள் திறக்க கூடாது. அதற்கான காரணம் மிகவும் சாதாரணமானவை. அந்த காலத்தில் குடிகளுக்கு கூர்மையான கம்பிகள் இருந்தது. இதனால் அதனை வீட்டிற்குள் திறக்கும் போது, அது பிறரை காயப்படுத்தலாம் அல்லது பொருட்களை உடைக்கலாம். அதுவே ஒரு வழக்கமாக மாறி நாளடைவில் மூடநம்பிக்கையாக மாறி விட்டது
அரச மரத்தை எந்த நேரத்தில் சுற்றலாம்?
அரச மரத்துக்கு அறிவை வளர்க்கும் சக்தி அதிகம். இதன் அடியில் அமர்ந்தாலேயே
மனம் தெளிவடையும். இதன் அடியில் அமர்ந்து மந்திரங்களை ஜபம் செய்தாலோ, தெய்வ
சம்பந்தமான ஸ்தோத்திரங்களை பாராயணம் செய்தாலோ, நிறைவான பலனை அடையலாம்.
அகிம்சையை போதித்த புத்தர். இந்த அரச (போதி) மரத்தடியில் அமர்ந்து, தவம்
செய்துதான் ஞானியாக ஆனார். வ்ருக்ஷாணாமஹம் அஸ்வத்த: மரங்களுக்குள் நான் அரச
மரமாக இருக்கிறேன் என்கிறார் கண்ணபிரான் கீதையில். மேலும், அரச மரத்தின்
அடிப்பகுதியில் பிரம்மதேவனும், நடுப்பகுதியில் மஹாவிஷ்ணுவும்,
நுனிப்பகுதியில் பரமசிவனும் வாசம் செய்கிறார்கள். ஆகவேதான். மும்மூர்த்தி
வடிவமான அரச மரத்தை பூஜைகள் செய்வதும், பிரதட்சணம் செய்வதும் வணங்குவதும்,
துன்பங்கள் ஏற்படுவதற்குக் காரணமான பாபங்களைப் போக்கி நல்ல அறிவையும்
பெற்றுத்தரும் என்கிறது சாஸ்திரம்.
சூரியன் உதயமாகும் நேரம் முதல் காலை சுமார் 10.40 மணி வரையில், சூரியனின் கிரணங்கள் அரச மரத்தில் விழுவதால், அப்போது அரசமரத்திலிருந்து வெளிவரும் காற்று நமக்கு, நமது உடலுக்கும் நன்மையைத் தரும். ஆகவே, காலை சுமார் 10.40 மணிக்குள் அரச மரத்தை பூஜைகள், பிரதட்சணம், நமஸ்காரம் போன்ற வழிபாடுகளைச் செய்ய வேண்டும் என்கிறது தர்மசாஸ்திரம். மற்ற நாட்களைவிட, சனிக்கிழமையன்று காலை நேரத்தில் அரச மரத்திலிருந்து வெளிவரும் சக்தி அதிகமாகக் காணப்படும் என்பதால் சனிக்கிழமைகளில், அரச மரத்தின் அடியில் சிறிது நேரம் அமர்ந்திருப்பதும், அரச மரத்தை வலம் வருவதும் மிகவும் நன்மையைத் தரும். குறிப்பாக, பல நாட்களாக குழந்தை பாக்கியமில்லாதவர்களின் (கர்ப்பப்பையில் ஏற்பட்ட) தோஷத்தைப் போக்கி குழந்தை பாக்கியத்தைத் தர, இந்த வழிபாடு மிகவும் சுலபமானது. கடுமையான-நாட்பட்ட, நோயால் பாதிக்கப்பட்டவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையன்றும் காலை சுமார் 8.20 மணிக்குள், உடல் மற்றும் உள்ள சுத்தியுடன்- பக்தியுடன்- அரச மரத்தை 108, 54 அல்லது 12 முதற பிரதட்சணம் செய்ய (வலம் வர) வேண்டும். அத்துடன் அரச மரத்தில் தனது உடலின் அனைத்து அங்கங்களும் படுமாறு, இரண்டு கைகளாலும் இறுக்கி அணைத்துக் கொள்ள வேண்டும். இதனால் தீராத நோய் தீரும். உடல் மற்றும் உள்ளம், வைரம்போல் நல்ல வலிமை பெறும். இது ஒரு சிறந்த பரிகாரமாகும். ஆனால், சனிக்கிழமையைத் தவிர, மற்ற நாட்களில் அரச மரத்தை பூஜைகள் பிரதக்ஷிணம், நமஸ்காரம் செய்யலாமே தவிர, அரச மரத்தை கையால் தொடக்கூடாது. நடுப்பகல், மாலை, இரவு போன்ற நேரங்களைத் தவிர்த்து, காலை சுமார் 10.40 மணிக்கு முன்பாக, அரச மரத்தை பூஜைகள், பிரதக்ஷிணம் போன்ற வகையில் வழிபாடு செய்வதே சிறந்தது.

இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)