வெள்ளி, 30 செப்டம்பர், 2016

ஞாயிற்றுத் தொகுதி

ஒன்றுக்கு மேற்பட்ட இடைத் தொடர்புகளையுடைய அம்சங்களுடன் சேர்ந்து இயங்குபவை தொகுதி (ஒருங்கியம்) எனப்படுகின்றது. தொகுதி என்பது பருப்பொருட்களால் ஆனது மட்டுமல்லாமல், கருத்துப்பொருளாகவும், நுண்பொருட்களாகவும் கூட இருக்கலாம். தெகுதியானது தனக்கென ஓர் உள்கட்டமைப்பு, உறுப்புகள், தொடர்புகள், இயக்கப்பாடு. நடத்தை இயங்குமுறை என்பவற்றைக் கொண்டிருப்பதுடன், தன்னைச் சூழ்ந்துள்ள சூழலுடன் ஏதேனும் வகையில் பரிமாற்றத்தை (கொடுக்கல் - வாங்கல்) கொண்டனவாகவும் காணப்படும். 
தொகுதியானது முழுமைத்தொகுதி, உபதொகுதி எனபிரதானமாக இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றன. சிக்கல் நிறைந்து இருப்பவை முழுமைத்தொகுதி என்றும், சிக்ல் தன்மை கொண்ட ஒரு தொகுதியின் சிக்கல் தன்மையை இலகுவாக்குவதற்கு அதனை சிறுசிறு தொகுதிகளாக்குவது உப தொகுதி எனவும் அழைக்கப்படுகின்றன.  உதாரணமாக, ஒரு பல்கலைக்கழகத்தில் உள்ள அனைத்துமாணவர்களையும் ஒன்றுசேர்த்து 'பல்கலைக்கழக மாணவர்கள்' என அழைப்பது முழுமைத்தொகுதி எனவும், பல்கலைக்கழக மாணவர்களை முதலாம் வருட மாணவர்கள், இரண்டாம் வருட மாணவர்கள், மூன்றாம் வருட மாணவர்கள் என பிரிப்பது உபதொகுதிகளெனவும் கொள்ளலாம்.

 தொகுதியின் வகை (Type of System)
சக்தி மற்றும் பதார்த்தங்களைப் பரிமாரிக்கொள்கின்ற முறைகளுக்கமைவாக தொகுதியானது பிரதானமான மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படுகின்றது.
1. தனித்த தொகுதி (Isolate System)
2. மூடிய தொகுதி (Closed System)
3. திறந்த தொகுதி (Open System)
• தனித்த தொகுதி தனது செயற்பாட்டிற்குரிய சக்தியையும் பதார்த்தங்களையும் தமது தொகுதியினுள்ளே உற்பத்தி செய்து கொள்ளும் தொகுதி தனித்த தொகுதி ஆகும். தனித்த தொகுதிக்குள் ஏதாவது பொருட்களோ, பதார்த்தமோ, சக்தியோ, கதிர்வீச்சோ உடசெல்லவோ அல்லது வெளியேறவோ முடியாதிருக்கும். தனித்ததொகுதிக்கு எடுத்துக்காட்டாக ஞாயிற்றுத் தொகுதியினைக் குறிப்பிடலாம்.
• மூடிய தொகுதி தனது செயற்பாட்டிற்குத் தேவையான பதார்த்தங்களைப் பெறாது சக்தியை மட்டும் பெற்று செயற்பட்டு மீளவும் சக்தியை வெளியிவிடுமாயின் அது மூடியதொகுதி ஆகும். மூடிய தொகுதிக்குள் சகத்தி மாத்திரம் உள்வரவும், வெளிச்செல்லவும் முடியும். ஆனால் பொருட்கள் பதாhததங்கள் உட்செல்லவோ வெளிச்செல்லவோ முடியாது. மூடிய தொகுதிக்கு எடுத்துக்காட்டாக புவியினுடைய வளிமண்டலத் தொகுதியினைக் குறிப்பிடலாம்.
• திறந்த தொகுதி தனது செயற்பாட்டிற்குரிய சக்தியையும் பதார்த்தங்களையும் வேறு தொகுதியிலிருந்து பெற்றுச் செயற்பட்டு அச்சக்தியையும் பதார்த்தங்களையும் வெளிப்படுத்தும் தொகுதி திறந்த தொகுதி எனப்படும். திறந்த தொகுதிக்கு எடுத்துக்காட்டாக ஆற்றுத்தொகுதி, உயிரினத்தொகுதி ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

ஞாயிற்றுத் தொகுதி (Solar System)
சூரியனையும் அதனைச் சுற்றியுள்ள புதன் முதல் நெப்ரியூன் வரையான 08 கோள்கள், 43 துணைக்கோள்கள் , சிறுகோள்கள் யாவும் சேர்ந்த கூட்டமே ஞாயிற்றுத்தொகுதி ஆகும். ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களுள் பெரிய நட்சத்திரமான சூரியன் கோள்களைத் தன்னிடம் கவர்கின்ற ஈர்ப்பு சக்தியைக் கொண்டுள்ளது.  கோளவடிவிலான சூரியன் 1.4 மில்லியன் கிலோமீற்றர் விட்டத்தையும், புவியில் இருந்து 149.65 மில்லியன் கிலோமீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது. சூரினது மேற்பரப்பு வெப்பநிலை 6000oC ஆகக் காணப்படுவதுடன், ஐதரசன்(H), ஹீலியம்(He) ஆகிய வாயுக்களையும் கொண்டுள்ளது.
solar system tl

ஞாயிற்றுத் தொகுதியில் புதன், வெள்ளி, புவி, செவ்வாய், வியாழன், சனி, யுரேனஸ், நெப்டியூன் ஆகிய கோள்கள் ஒழுங்குமுறையாக அமைந்துள்ளன. ஞாயற்றுத்தொகுதியில் உள்ள கோள்களை அகக்கோள், புறக்கோள் என இரண்டாகப் பாகுபடுத்துகின்றனர். புதன், வெள்ளி, புவி, செவ்வாய் ஆகிய முதல் 4 கோள்களும் அகக்கோள் எனவும், வியாழன், வெள்ளி, சனி, யுரேனஸ் ஆகிய இறுதி 4 கோள்களும் புறக்கோள்கள் எனவும் அழைக்கப்படுகின்றன.
ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களில் மிகப்பெரிய கோளாக வியாழனும், மிகச்சிறய கோளாக புதனும் காணப்படுகின்றது. அதேவேளை வெப்பம் கூடிய கோளாக வெள்ளியும், நீலக்கோளாக புவியும், சிவப்புக்கோளாக செவ்வாயும் காணப்படுகின்றது. ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்கள் தம்மைத் தாமே சுற்றிக்கொண்டு, நீள்வட்டப்பாதையில் சூரியனையும் சுற்றிவருகின்றன. வெள்ளி தவிர்ந்த ஏனைய கோள்கள் யாவும் சுழற்சியின்போது மேற்கிலிருந்து கிழக்குநோக்கி சுழற்சியுற, வெள்ளிகோள் மாத்திரம் கிழக்கிலிருந்து மேற்குநோக்கி சுழற்சியுறுகின்றது.

அட்டவணை: ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்கள் 
கோள்கள்
விட்டம் (KM)
சூரியனிலிருந்தான தூரம் (Million KM)
சுழற்சிக் காலம்
சூரியனைச் சுற்ற எடுக்கும் காலம்
உப கோள்கள்
புதன்
4879.4
57.9
58.65 புவிநாட்கள்
87.97 புவிநாட்கள்
0
வெள்ளி
12103.6
108.2
243 புவிநாட்கள்
225.7 புவிமணித்தியாலயம்
0
புவி
1276.3
149.6
1 புவிநாட்கள்
365.25 புவிநாட்கள்
1
செவ்வாய்
6794.0
227.9
1.02 புவிநாட்கள்
1.88 வருடம்
2
வியாழன்
142984.0
778.4
9.9 புவிமணித்தியாலயம்
11.86 புவிவருடம்
63
சனி
120536.0
1426.7
10.2 புவிமணித்தியாலயம்
29.46 புவிவருடம்
50
யுரேனஸ்
51118.0
2871.0
17.9 புவிமணித்தியாலயம்
83.75 புவிவருடம்
27
நெப்டியுன்
55528.0
4498.0
16.11 புவிமணித்தியாலயம்
164.79 புவிவருடம்
13
  
ஞாயிற்றுத் தொகுதியில் உள்ள கோள்களில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய நீர், வழி என்பன சிறப்பாக காணப்படுகின்ற ஒரேயொரு கோள் புவி ஆகும். புவியானது தனது அச்சில் 23 ½ பாகை சரிவாக உள்ளது. புவியைச் சுற்றிப் பயணம் செய்கின்ற ஒரேயொரு உபகொள் சந்திரன் ஆகும். புவி தனது அச்சில் தன்னைத்தானே சுற்றி வருவது புவிச் சுழற்சி எனப்படுகின்றது. இது மேற்கில் இருந்து கிழக்குத் திசையாக சுற்றி வருகின்றது. புவியானது தன்னைத்தானே சுற்றுவதனால் சூரியனின் ஒளி கிடைக்கும் பகுதி பகலாகவும், ஒதுக்குப் பகுதி இரவாகவும் விளங்குகின்றது.
  
புவி தன்னைத்தானே சுற்றிக்கொண்டு சூரியனையும் சுற்றிக்கொண்டுவருவதனால் கோடை, மாரி எனும் பருவகாலங்கள் ஏற்படுகின்றன. ஜுன் 21 இல்  சூரியன் கடகக்கோட்டுக்கு (23 ½ பாகை வடக்கு) உச்சம் கொடுக்கின்றபோது வடஅரைக்கோள நாடுகள் அதிக வெப்பத்தினைப் பெற்று கோடைப்பருவமும், தென்னரைக்கோளத்தில் குறைவான வெப்பநிலை நிலவுவதால் மாரிப்பருவமும் நிலவுகின்றது. டிசம்பர் 21 இல்  சூரியன் மகரக்கோட்டுக்கு (23 ½ பாகை தெற்கு) உச்சம்கொடுக்கின்றபோது, தென்னரைக்கோள நாடுகள் அதிக வெப்பத்தினைப் பெற்று கோடை பருவத்தையும், வடஅரைக்கோளத்தில் மாரிப்பருவத்தையும் அனுபவிக்கின்றன.

மார்ச் 21 இல் சூரியன் மத்தியகோட்டிற்கு உச்சம் கொடுக்கும்போது தென்னரைக்கோளத்தில் இலையுதிர் பருவமும், வட அரைக்கோளத்தில் இளவேனிற் பருவமும் நிலவுகின்றது. செப்டம்பர் 23 இல் சூரியன் மத்திய கோட்டில் உச்சம் கொடுக்கும்போது வடஅரைக்கோளத்தில் இலையுதிர்பருவமும், தென்னரைக்கோளத்தில் இளவேனிற் பருவமும் நிலவுகின்றது.

சூரியன் கடகக்கோட்டிற்கு உச்சம் கொடுக்கின்றபோது, ஆக்டிக்வட்டம் 24 மணித்தியாலம் பகலாகவும், அந்தாட்டிக் வட்டம் 24 மணித்தியாலம் இரவாகவும் இருக்கும். சூரியன் மகரக்கோட்டிற்கு  உச்சம் கொடுக்கின்றபோது, அநடதாட்டிக் வட்டம் 24 மணித்தியாலமும் பகலாகவும், ஆட்டிக் வட்டம் 24 மணித்தியாலமும் இரவாகவும் இருக்கும்.

சூரியன் மத்திய கோட்டிற்கு உச்சம் கொடுக்கின்ற நாட்களான மாச் - 21, செப்டம்பர் -23 ஆகிய தினங்களில் சமஇராக்காலங்கள் நிலவப்பெறும்.

கருத்துகள் இல்லை: